கேரளா ஓணம் பம்பர் லாட்டரி: டிக்கெட்டின் பின்பக்கம் பெயர் எழுதுவது அவசியமா? லாட்டரி துறை சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.30 கோடி முதல் பரிசு கொண்ட ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. டிக்கெட்டுகள் வாங்கும் பலருக்கும், லாட்டரியின் பின்பக்கத்தில் உள்ள பெயர், முகவரி எழுதும் பகுதியில் தங்கள் பெயரை எழுதவேண்டுமா? இல்லை எழுதக்கூடாதா? என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக கேரள லாட்டரி துறையின் அறிவுறுத்தல் என்ன என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் முதல் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த லாட்டரிக்கான முதல் பரிசுத்தொகை ரூ.30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை ரூ.25 கோடி முதல் பரிசாக இருந்தது. இந்த முறை 30 கோடி ரூபாய் முதல் பரிசு என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Kerala Thiruvonam Bumper 2026 Why You Should write Your name address in Lottery Ticket Immediately

டிக்கெட் பின்புறம் பெயரை எழுதலாமா?

எப்படியாவது கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டியதுதான் என்ற கனவுடன் கேரள லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். டிக்கெட் விற்பனை ஹாட் கேக் போல அனல் பறந்து வரும் நிலையில், டிக்கெட் வாங்கியவர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்ற சில அறிவுறுத்தல்கள் கேரள லாட்டரி வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

அதாவது, ஒணம் பம்பர் டிக்கெட்டை வாங்கியவர்கள், உடனடியாக டிக்கெட்டின் பின்பக்கம் உள்ள இடத்தில் பெயர், முகவரி, (ஆதாரில் இருப்பது போல) கையெழுத்து ஆகியவற்றை உடனடியாக எழுதி வைக்க வேண்டும். ஏனெனில் குலுக்கல் நடைபெற்ற பிறகு உங்களிடம் இருப்பது வின்னிங் டிக்கெட் என்பது உறுதியானால் உடனடியாக லாட்டரி அதிகாரிகளிடம் அதை சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை டிக்கெட்டை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம்.

10 சீரிஸ்களில் விற்பனை

அதேபோல, டிக்கெட்டுகள் கிழியாமல் பத்திரமாக இருக்க வேண்டும். கிழிந்து இருந்தாலோ அல்லது அடையாளம் தெரியாத வகையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலோ பரிசுத்தொகை வழங்கப்படாது. நிராகரிக்கப்படும். அதுபோக கையெழுத்திடப்படாத டிக்கெட்டுகளை பரிசுத்தொகை வெண்டும் என உரிமை கோரி வழங்கினால் ஏமாற்றப்படும் அபாயமும் இருப்பதால், லாட்டரி வாங்கிய உடனேயே பின்பக்கம் பெயர் எழுதிவைப்பது.. டிக்கெட்டின் உரிமையாளர் நீங்கள்தான் என்பதை உறுதி செய்வது அவசியம் என்கிறார்கள்.

ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விலை ரூ.500 ஆகும். இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.30 கோடி மட்டுமின்றி இரண்டாவது பரிசு ரூ.1 கோடி தலா 20 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. TA, TB, TC, TD, TE, TG, TH, TJ, TK and TL என மொத்தம் 10 சீரிஸ்களில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

90 லட்சம் டிக்கெட்டுகள்

90 லட்சம் டிக்கெட்டுகள் வரை விற்பனைக்கு விட கேரள லாட்டரித்துறை திட்டமிட்டுள்ளது. ஓணம் பம்பர் டிக்கெட்டின் குலுக்கல் அடுத்த மாதம் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி தலைமை அலுவலகத்தில் இதன் குலுக்கல் நடைபெறுகிறது. லாட்டரி டிக்கெட்டுகள் தமிநாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+