திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா சுற்றுலாவின் மாட்டுக்கறி டுவிட்.. மதநம்பிக்கையை புண்படுத்துகிறது.. விஹெச்பி கடும் கண்டனம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Kerala Tourism tweets on beef dish, vhp slammed

    திருவனந்தபுரம்: கேரள சுற்றுலா கழகத்தின் மாட்டுக்கறி குறித்த டுவிட்டர் பதிவு, பசுவை தெய்வமாக வழிபடும் ஏராளமான மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருப்பதாக விஷ்வ இந்து பரிஷித் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கேரளா மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், "மாட்டிறைச்சியின் மென்மையான துண்டுகள், நறுமண மசாலாப் பொருட்கள், தேங்காய் துண்டுகள் மற்றும் கறிவேப்பிலைகளுடன் மெதுவாக வறுத்தெடுக்கப்படுகின்றன. மிகவும் உன்னதமான உணவுக்கான ஒரு செய்முறை, பீஃப் உலார்தியது. நறுமணப் பொருட்கள் நிலமான கேரளாவில்.." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Kerala Tourism on Twitter posted a beef dish: VHP slammed saying it hurts religious sentiments

    இந்த பதிவினை பார்த்து கோபம் அடைந்த விஸ்வ இந்து பரிஷித்தின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால், தனது டுவிட் பதிவில் கேரளா சுற்றுலாவுக்கு விளம்பரம் செய்கிறதா அல்லது மாட்டுக்கறிக்கு விளம்பரம் செய்கிறதா? மாட்டை தெய்வமாக வழிபடும் கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இந்த பதிவு இருக்கிறது. சங்கராச்சாரியார் மண்ணில் இப்படி ஒரு டுவிட் பதிவா? என கண்டித்துள்ளார்.

    அத்துடன் தனது பதிவில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோரை டேக் செய்திருக்கிறார், அத்துடன் இவர்கள் கேரள சுற்றுலா கழகத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் வினோத் பன்சால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English summary
    VHP slammed tweet saying Kerala Tourism's beef tweet hurts religious sentiments of cow worshipper
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X