ரோட்டை விட்டுவிட்டு.. கூகுள் மேப்பை பார்த்த சுற்றுலா பயணிகள்! நடுக்காட்டில் பாய்ந்த கார்! விபத்து
திருவனந்தபுரம்: கூகுள் மேப்பை அப்படியே நூல் பிடித்தது போலச் சென்று சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் இப்போது அரங்கேறி இருக்கிறது.
இப்போது கிட்டதட்ட அனைவரது மொபைலிலும் இடம்பெற்றிருக்கும் செயலி என்றால் அது கூகுள் மேப்தான். குறிப்பாக புதிய ஊருக்கு அல்லது ஏரியாவுக்கு செல்லும் போது கூகுள் மேப்பே நமக்குப் பெரியளவில் உதவும்.
புதிய ஊர் என்று இல்லை.. பழக்கப்பட்ட ஏரியா என்றாலும் கூட ரியல் டைம் டிராபிக் எனப்படும் தற்போதைய போக்குவரத்து நெரிசலையும் கணக்கிட்டு வேகமாகச் செல்லும் வழியைக் கூகுள் மேப் நமக்கு வழங்கும்.

வழிதேடி புது இடத்திற்குச் செல்வதையே கூகுள் மேப்ஸுக்கு முன்பு, பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம். முன்பெல்லாம் எதாவது புது இடத்திற்கு நாம் செல்ல யாரிடமாவது வழி கேட்டுச் செல்ல வேண்டி இருக்கும். சில நேரங்களில் அவர்கள் வழி தெரியாமலேயே உளறி விடவும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற நேரங்களில் அது நம்மைச் சுற்றலில் விட்டுவிடும் . இதுபோன்ற சிக்கல்களைக் கூகுள் மேப்ஸ் முற்றிலுமாக நீக்கிவிட்டது.
தினமும் பல கிமீ பயணிக்க வேண்டிய கார் ஓட்டுநர்கள், டெலிவரி பாய்களுக்கும் கூகுள் மேப் பெரியளவில் உதவுகிறது. பல நேரங்களில் கூகுள் மேப் நமக்குச் சரியான வழியையே காட்டும் அதேநேரம் எப்போதும் 100% துல்லியமாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. கூகுள் மேப்பை பார்த்து அப்படியே நூல் பிடித்தது போலச் சென்றால் எங்காவது சென்று முட்டிக் கொண்டு நிற்க வேண்டியது தான்.
இதுபோன்ற காமெடி நிகழ்வுகளும் பல இடத்தில் நடந்துள்ளது. அப்படி இப்போது நடந்த ஒரு சம்பவத்தால் விபத்தும் கூட ஏற்பட்டுள்ளது. இது கோடை என்பதால் இப்போது பலரும் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருகிறார்கள். எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இடுக்கி மாவட்டத்திற்குச் சுற்றுலா வந்து இருக்கிறார்கள். புது ஊர் என்பதால் அவர்கள் கூகுள் மேப் பார்த்து வண்டியை ஓட்டி வந்துள்ளனர்.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா மலையிஞ்சி பகுதியில் கிழார்குன்று என்ற வீழ்ச்சி அமைந்துள்ளது. 8 சுற்றுலாப் பயணிகள் இந்த குழு இந்த நீர்வீழ்ச்சியைக் காணச் சென்றனர். மலை உச்சி வரை வாகனம் செல்ல வழி இருந்தது. இதனால் அவர்கள் மலைக்கு மேலே வண்டியிலேயே வந்துவிட்டனர். அங்கிருந்து கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கூகுள் மேப் உதவியுடன் சென்ற சுற்றுலாப் பயணிகள் திடீரென வழியை மிஸ் செய்துவிட்டனர். கூகுள் மேப் காட்டிய தகவலை அப்படியே நம்பி காட்டுப்பகுதியில் வண்டியை இயக்கியுள்ளனர். இதனால் நீர்வீழ்ச்சி இருக்கும் திசையில் செல்லாமல் எதிர்புறம் யானைகள் நடமாட்டம் இருக்கும் திசையில் சென்றுள்ளனர். அப்படியே 4 கிமீ உள்ளே சென்றுள்ளனர். இதனால் எப்படித் திரும்ப வேண்டும் எனத் தெரியாமல் அவர்கள் தவிர்த்துள்ளனர்.
அப்போது சுற்றுலாப் பயணிகளில் ஒருவரான ஜிஜூஜேம்ஸ் 30 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் 35 வயதான அவருக்கு எழுந்து நடக்க முடியாத அளவுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திருவனந்தபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொடுபுழா தீயணைப்புத் துறை, வனத்துறை உதவியுடன் காயமடைந்த சுற்றுலாப் பயணியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கூகுள் மேப் நமது வாழ்க்கையை எளிமைப்படுத்தி மிகப் பெரியளவில் உதவி இருக்கிறது என்றாலும் கூட அதை எல்லா இடங்களிலும் முழுமையாக நம்பக் கூடாது என்பதையே இது காட்டுகிறது.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
கேரளாவில் அரசு பேருந்துகளில் இனி இலவச பயணம்! சாதனை உத்தரவில் கையெழுத்திட்ட பெண் செயலாளர்! சூப்பர் -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications