கேரளா: உறுப்பினரே அல்லாதவரை வேட்பாளராக அறிவித்த பாஜக- போட்டியிட மறுத்த பழங்குடி பட்டதாரி
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் 115 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்த பாஜக வயநாடு மாவட்டத்தில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களே இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. மேலும் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத பனியா பழங்குடி இளைஞரை வேட்பாளராக அறிவித்தும் பார்த்தது பாஜக. ஆனால் வேட்பாளராக போட்டியிட முடியாது என மறுத்துவிட்டார் அந்த இளைஞர்.
கேரளாவில் ஆளும் இடதுசாரிகள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. கேரளாவில் பாஜகவும் கால்பதிக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

வயநாடு பரிதாபம்
இம்முறை 115 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக கூறி வேட்பாளர் பட்டியலையும் கெத்தாக அறிவித்தது பாஜக. இதில் வயநாடு மாவட்டம் மானந்தவாடி தொகுதியில் மணிகண்டன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

பனியா பழங்குடி இளைஞர்
பனியா பழங்குடி இனத்தில் படித்த முதல் பட்டதாரி இளைஞர். அவருக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பதாக பெருமிதமாக பேசப்பட்டது. இத்தனை அமர்க்களமும் சில மணிநேரங்கள்தான் நீடித்தன.

வேட்பாளராக போட்டியிட மறுப்பு
சட்டசபை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக தாம் அறிவிக்கப்பட்டதை கேள்வி பட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாராம் மணிகண்டன். இத்தனைக்கும் கேரளா அரசு ஊழியராகவும் உள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினராகவோ பாஜகவின் ஆக்டிவிஸ்ட்டாக தாம் இல்லாத நிலையில் எப்படி வேட்பாளராக அறிவிக்கலாம்? என கொந்தளித்துவிட்டாராம் மணிகண்டன்.

வேட்பாளர்கள் தேடல்
இப்போது பாஜக வேட்பாளராக போட்டியிட முடியாது எனவும் மறுத்துவிட்டார். இதேபோல் பத்தேரி தொகுதிக்கும் யாரை வேட்பாளராக அறிவிப்பது என தெரியாமல் விக்கித்து கிடக்கிறதாம்












Click it and Unblock the Notifications