தமிழ்நாடு ஓவர்.. இனி கேரளாவில் விஜய்யின் தவெக என்ட்ரி? மலையாள ரசிகர்களுக்கு விரைவில ஹேப்பி நியூஸ்?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கட்சி தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. விஜய் முதல்வராகி விட்டார். தமிழகத்தை போல் கேரளாவிலும் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் கேரளாவிலும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிவிட்டாரா? என்ற கேள்வி இருந்துள்ளதோடு, இணையதளங்களில் அதுதொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டாக தொடங்கி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்தவர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் என்ட்ரி கொடுத்தார். சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறினார். மெஜாரிட்டி இல்லாத நிலையில் பிற கட்சிகளின் ஆதரவில் ஆட்சியை பிடித்த விஜய் முதல்வராகி உள்ளார்.

Kerala TVK

அதேபோல் புதுச்சேரியிலும் தவெக 2 வேட்பாளர்கள் 2 தொகுதிகளும், கூட்டணியில் களமிறங்கியவர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரியை விட தமிழகத்தில் விஜய்யின் வெற்றி என்பது பெரிய அளவில் கவனம் பெற்றது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே அவர் திமுக, அதிமுக கூட்டணியை வீழ்த்தி அரியணை ஏறியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் விஜய்யின் தவெகவிற்கு வாக்களித்ததும், அவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை விஜய்க்கு வாக்களிக்க கூறி அதனை செய்து காட்டியதும் தான் முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் தமிழ்நாடு, புதுச்சேரியை தொடர்ந்து விஜய் கேரளா அரசியலில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் விஜய் தமிழக முதல்வரானதில் இருந்து கேரளாவில் அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்பட பிற சமூகவலைதளங்களில் TVK Kerala, Kerala TVK, TVK for Kerala என்று விஜய்யின் கட்சி பெயரில பல சமூக வலைதள பக்கங்கள் புதிதாக உருவாகி உள்ளன. அதோடு கேரளாவில் விஜய் ரசிகர்கள் அவரது வெற்றியை கொண்டாடும் வீடியோக்கள் அதிகமாக பரவி வருகின்றன. குறிப்பாக கேரளாவில் விரைவில் தவெகவின் கிளைகள் தொடங்கப்படும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் தனது தவெக கட்சியை கேரளாவிலும் அறிமுகம் செய்ய தயாராகிவிட்டாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தள்ளது.

கேரளாவை எடுத்து கொண்டால் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 100க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் இருந்தன. முதலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரத்த தானம், அன்னதானம் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்பட்டு வந்தவர்கள். தற்போது டிவிகே என்று பெயர் மாற்றி சமூக வலைதளங்களில் செயல்பட தொடங்கி உள்ளனர். கேரளாவில் உள்ள அவரது விஜய் ரசிகர்கள் அவர் கேரளாவிலும் கட்சியின் செயல்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தளபதி மக்கள் இயக்கம் மக்கள் இயக்கத்தின் திருவனந்தபுரம் மாவட்டம் மகளிர் அணி தலைவர் சவுமியா எஸ்எஸ் கூறுகையில், ''
ரசிகர் மன்றத்தின் கீழ் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்தலாம். ஆனால் ஒரு அரசியல் கட்சியின் பெயரில் இதைச் செய்யும்போது, அதிகாரப்பூர்வ அனுமதி அவசியம். கேரளாவில் பல விஜய் ரசிகர்கள் அந்த அறிவிப்புக்கா காத்திருக்கிறார்கள். உறுப்பினராக இணைய பலரும் விருப்பம் தெரிவித்து அழைக்கின்றனர். ஆனால் இன்னும் கட்சி தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை. இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கும்படி தெரிவித்துள்ளனர். அனுமதி கிடைத்தவுடன், மாநில கிளையை உருவாக்குவதற்கான முதல் படி வேலைகள் தொட்ஙகப்படும்'' என்றார். இதனால் தமிழகம், புதுச்சேரியை தொடர்ந்து கேரளாவிலும் எப்போது கட்சி விரிவாக்கப்படும் என்று சேட்டன், சேட்சிக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+