பினராயிக்கு அதிர்ச்சி தந்த "உமா".. இடைத்தேர்தலை அடித்து தூக்கிய காங்கிரஸ்.. இடதுசாரிகள் படுதோல்வி!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திரிக்ககரா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் உமா தாமஸ் வென்றுள்ளார்.
கேரளாவில் சிபிஎம் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள திரிக்ககரா தொகுதி எம்எல்ஏ பிடி தாமஸ் மரணம் காரணமாக அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பிடி தாமஸ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர். கடந்த டிசம்பர் மாதம் இவர் மரணம் அடைந்தார்.

கேரளா
இதையடுத்து காங்கிரஸ் சார்பாக பிடி தாமஸின் மனைவி உமா தாமஸ் இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து இடதுசாரிகள் கூட்டணி சார்பாக சிபிஎம் வேட்பாளர் ஜோ ஜோசப் நிறுத்தப்பட்டார். இந்த திரிக்ககரா தொகுதி தொடங்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் தொகுதி ஆகும். 2011ல் இங்கு தொகுதி மறுவரையறைக்கு பின் முதல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் பென்னி இங்கு வென்றார்.

இடைத்தேர்தல்
அதன்பின் 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் இங்கு காங்கிரஸ்தான் வென்றது. காங்கிரஸ் சார்பாக இங்கு பிடி தாமஸ் தொடர்ந்து வெற்றிபெற்றார். இதையடுத்து 2021ல் மீண்டும் வென்றவர்.. அதே வருடம் டிசம்பர் மாதம் மரணம் அடைந்தனர். இதையடுத்து வந்த இடைத்தேர்தலில் தற்போது திரிக்ககரா தொகுதியில் அவரின் மனைவி உமா தாமஸ் வென்றுள்ளார். காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது கோட்டையை பிடித்துள்ளது.

உமா தாமஸ்
கடந்த 31ம் தேதி இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே உமா தாமஸ் முன்னிலை வகித்தார். மொத்தமாக எண்ணப்பட்ட வாக்குகளில் 63201 வாக்குகள் பெற்று உமா தாமஸ் வெற்றிபெற்றார். சிபிஎம் வேட்பாளர் ஜோ ஜோசப் 40286 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் காங்கிரஸ் மீண்டும் இங்கு வென்றுள்ளது.

சிபிஎம்
ஆளும் சிபிஎம் கட்சிக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பினராயி விஜயன் சரியாக ஆட்சி செய்யவில்லை. அதற்கு கொடுத்த பெயில் மார்க்தான் இந்த தேர்தல் முடிவு. கேரளாவில் அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த சட்டசபை தேர்தல் கேரளாவில் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications