‛‛சன்னி லியோன் தான் வேணும்’’.. அடம்பிடித்த மாணவர்கள்.. கேரள பல்கலைக்கழகம் போட்ட அதிரடி உத்தரவு
திருவனந்தபுரம்: சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு கேரள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அனுமதி மறுத்துள்ளார். ஏற்கெனவே இதேபோன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பேர் பலியான நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜூலை 5ம் தேதி சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. கேரளா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மோகனன் குன்னும்மாள் இதற்கு அனுமதி மறுத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் இருப்பை உறுதி செய்யுமான பதிவாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்திருந்தது. இதில் எதிர்பார்த்ததை விட மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நெரிசலில் சிக்கி சுமார் 4 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்திருந்தைனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அப்போதிலிருந்த கல்லூரிகளில் நடத்தப்படும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே தற்போது சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சர்ச்சைக்குரிய படங்களில் நடித்திருந்த சன்னி லியோன் பின்னர், பாலிவுட், கோலிவுட் திரைத்துறைகளில் தலைக்காட்ட தொடங்கினார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் சன்னி லியோன் கிளாமர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டியிருந்தார். பின்னர் ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கல்வி நிலையங்களில் சினிமா துறையினரை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சினிமாக்கள் பொது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. போதைப் பொருள் பயன்பாடு, பெண்களை போகப்பொருளாக பார்ப்பது உள்ளிட்டவை சினிமாக்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. இதனை ஒழுங்குப்படுத்த வேண்டியுள்ள நிலையில், திரை துறையினரை கல்லூரி விழாக்களுக்கு அழைப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications