மனைவியை 4 பேருக்கு விருந்தாக்கிய கணவன்.. மதுவை ஊற்றி.. சிகரெட்டால் சூடுவைத்து.. ரோட்டில் வீசிய அவலம்
மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த கணவன் கைதானார்
திருவனந்தபுரம்: மனைவிக்கு மதுவை ஊற்றி... நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரமும் செய்து நடுரோட்டில் கிழிந்த ஆடையுடனும், படுகாயங்களுடன் வீசிவிட்டு சென்றுள்ளார் கணவர்.. இவ்வளவு கொடூரமும் அவர்களின் 5 வயது மகன் கண்முன்னாடியே நடந்துள்ளது! இதையடுத்து கணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மற்றொருவரை தேடி வருகின்றனர்.. தற்போது கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்கள் அந்த தம்பதி.. மனைவிக்கு 25 வயதாகிறது.. 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உட்பட 2 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று இவரது கணவர், வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மனைவியை குடிக்க வைத்துள்ளார்.. பிறகு தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து, மனைவியை பலாத்காரம் செய்தார்.

குழந்தை
5 வயது மகன் கண்முன்னாடியே மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மிரண்டு விழித்து அந்த குழந்தையையும், கொடூரமாக இவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கி நடுரோட்டில் வீசிவிட்டு போயுள்ளனர். கிழிந்த ஆடைகள், படுகாயங்களுடன் ரோட்டில் விழுந்து கிடந்த பெண்ணின் நிலைமையை பார்த்த ஒரு இளைஞர், அவரை மீட்டு தன் காரில் ஏற்றி கொண்டு பெண்ணின் வீடு வரை கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றுள்ளார்.

விசாரணை
பிறகு போலீசிலும் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் தந்திருக்கிறார். இதையடுத்தே விசாரணை ஆரம்பமானது.. அப்போது போலீசில் பாதிக்கப்பட்ட பெண் சொல்லும்போது, "என்னையும் என் குழந்தையையும், என் கணவர் புதுக்குறிச்சி பீச் அருகே உள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு எனக்கு மதுவை ஊற்றி குடிக்க சொன்னார்கள்.. நான் மறுத்ததும், என் வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றிவிட்டனர்.

வன்கொடுமை
நான் போதையில் மயங்கி விழுந்ததும், நண்பர்கள் அனைவரும் என்னை மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.. என் மகன் முன்பே அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்றார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை தந்த நிலையில்,இ ஒரு டிவி சேனலுக்கும் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி தந்திருந்தார்.. அதில், தன்னை பலாத்காரம் செய்தபோது, கணவரும்,அவரது நண்பர்களும் தன் சிகரெட் நெருப்பால் உடம்பெல்லாம் சூடு வைத்து காயப்படுத்தியதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

சித்ரவதை
இந்த விஷயம் தெரிந்த உடனேயே கணவரும், அந்த 5 நண்பர்களும் எஸ்கேப் ஆன நிலையில், தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து உள்ளே தள்ளி உள்ளனர்.. கணவர் உட்பட 6 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.. மற்றொருவரை தேடி வருகிறார்கள்.. குழந்தையை கொடூரமாக சித்ரவதை செய்ததால் அவர்கள் மீது போக்சோ உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த பலாத்கார சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகளிர் ஆணையம்
இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்ததும் கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.. மகளிர் ஆணையத்தின் தலைவர் எம்சி, ஜோஸபைன், இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருவனந்தபுரம் ஊரக போலீஸ் எஸ்பிக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளார்... பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா டீச்சரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார் "அந்த பெண்ணை குழந்தை முன்னாடியே பலாத்காரம் செய்த கொடூரமான மனம் கொண்டவர்கள் எல்லார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications