அதிர்ச்சி சம்பவம்! திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது.. ஆசிட் வீசிய 2 குழந்தைகளின் தாய்
திருவனந்தபுரம்: கேரளாவில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது 35 வயது மதிக்கத்தக்கப் பெண் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பூஜாப்புரா பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். 27 வயதாகும் இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது மாலை நேரத்தில் திடீரென வீட்டின் பின்புறத்தில் இருந்து அருண்குமாரின் அலறிக் கொண்டே வந்துள்ளார்.

வீட்டில் இருந்து வந்த கதறல்
அக்கம்பக்கத்தினர் வந்து அருண்குமாரை பார்த்தபோது அவர் முகத்தில் எல்லாம் ஆசிட் காயம் ஏற்பட்டு, அவர் வலியில் துடித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக அவர் அடிமாலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்ன நடந்தது
35 வயதான ஷீபா என்ற பெண்ணுடன் சமூக வலைத்தளத்தின் மூலம் அருண்குமாருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அது அப்படியே காதலாக மாற இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும், ஷீபாவுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது அருண்குமாருக்கு பின்னரே தெரிய வந்தது. இதனால் ஷீபாவுடன் பேசுவதையும் அவரை தொடர்பு கொள்வதையும் அருண்குமார் தவிர்க்கத் தொடங்கியுள்ளார்,

ஆசிட் வீச்சு
இதனால் கோபமடைந்த ஷீபா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம் வலியுறுத்தத் தொடங்கியுள்ளார். இருப்பினும், அதற்கு அருண்குமார் மறுக்கவே, அவரிடம் இருந்து ரூ 2 லட்சத்தைக் கேட்டு பிளாக்மெயில் செய்யத் தொடங்கியுள்ளார். இது குறித்துப் பேசவே கடந்த செவ்வாய்க்கிழமை அருண்குமார் வீட்டிற்கு ஷீபா சென்றுள்ளார். பேசிக்கொண்டிருக்கும் போதே மறைந்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண்குமார் மீது வீசியுள்ளார் ஷீபா! இது அத்தனை அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

ஷீபா கைது
அருண்குமாரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட போலீசார், ஷீபாவை அவரது கணவர் வீட்டில் இருந்து கைது செய்தனர். ஆசிட்டை வீசும் போதும் அது அவர் மீதும் பட்டதால் ஷீபாவுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஷீபாவை கைது செய்து போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திருணம் செய்து கொள்ள மறுத்த இளைஞர் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications