Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் ஒரு மஞ்சுமெல் பாய்ஸ்! 1,500 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்.. திக் திக் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தில் வருவது போன்றே பெரிய பள்ளத்தாக்கில் தவறி விழுந்த கேரள வாலிபரை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி உயிருடன் பத்திரமாக மீட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 1,500 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய விவரத்தை இங்கு பார்க்கலாம்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மஞ்சுமெல் பாய்ஸ் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. மலையாள படம் என்றாலும் இந்த சினிமா, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பள்ளத்தாக்கில் சிக்கிய வாலிபரை மீட்க நண்பர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து போராடும் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

kerala-youth-rescued-after-falling-gorge-in-kottarakkara-view-point

வியூ பாயிண்ட்

இந்த நிலையில்தான், "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தை போன்றே பெரிய பள்ளத்தாக்கில் தவறி விழுந்த கேரள வாலிபர் உயிருடன் பத்திரமாக மீட்கபட்டுள்ளார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்ணப்புரம் அருகே உள்ள கோட்டப்பாரா என்ற இடத்தில் மிகப்பெரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. இந்த பள்ளத்தாக்கு பகுதியை பார்ப்பதற்காக வியூ பாயிண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமொதும். இந்த நிலையில், தான், வியூ பாயிண்ட் பகுதிக்கு வண்ணப்புரம் சின்கல் சிட்டி பகுதியை சேர்ந்த சாம்சன் என்ற 23 வயது இளைஞர், தனது நண்பர்களான சிவாஜி மற்றும் விஷ்ணுவுடன் சென்றார்.

1,500 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார்

அதிகாலை 3 மணியளவில் நண்பர்கள் 3 பேரும் "வியூ பாயிண்ட்" பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்தது. இதனால், அங்குள்ள பாறைகள் வழுக்கும் என்பதை உணராமல், சாம்சன் பாறை மீது ஏறி நடந்து சென்றார். அப்போது அவர் கால் வழுக்கி 1,500 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார். பள்ளத்தாக்கில் தவறி விழுந்த சாம்சன், 70 அடி ஆழத்தில் பாறையில் இருந்த புல்வெளி பகுதியில் சிக்கினார்.

தன்னை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார். அவர் சத்தம் கேட்டதும் நிம்மதி அடைந்த நண்பர்கள், உடனடியாக தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அடுத்த சில நிமிடங்களில் தீ அணைப்பு வீரர்கள் நிகழ்விடத்திற்கு வந்தனர். அதிகாலை நேரம் என்றாலும், இளைஞரை மீட்பது மட்டுமே ஒரே குறிக்கோள் என்று தீ அணைப்பு வீரர்கள் வேகமாக பள்ளத்தாக்கு பகுதிக்கு கயிறு மூலமாக இறங்கினர்.

குறுக்கு எழும்பு முறிந்தது

சாம்சன் வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டு இருந்ததால், அவர் இருக்கும் இடத்தை விரைவாக எட்டிய தீ அணைப்பு வீரர்கள் சாம்சனை மீட்டனர். ஒரு வலைக்குள் அவரை வைத்து மேலே உள்ள வீரர்களை கொண்டு இழுத்தனர். ஒருவழியாக உயிருடன் சாம்சனை பார்த்ததும் அவரது நண்பர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பள்ளத்தாக்கில் விழுந்ததில் சாம்சனுக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு இருந்தன.

அவரது விலா எலும்பு பகுதியில் முறிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சாம்சன் அனுமதிக்கப்பட்டார். சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த மீட்பு பணி நடைபெற்றுள்ளது. தீ அணைப்பு வீரர்கள் துணிச்சலுடன் பள்ளத்தாக்கு பகுதியில் இறங்கி பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+