Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லா மருத்துவமனைகளிலும் சேச்சி, சேட்டன்! ஆனா.. உலகம் முழுக்க நர்சுகளை அனுப்பும் கேரளாவின் மறுபக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள பொது சுகாதார உள்கட்டமைப்பு குறித்த தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை, ஜனவரி 21 அன்று கேரள சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, சுகாதார அமைப்பில், குறிப்பாக மனிதவளத்தில் உள்ள பெரும் குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

CAG அறிக்கையின்படி, 2023 மே மாத நிலவரப்படி, கேரளாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1,160 மருத்துவர்கள், 978 செவிலியர்கள் மற்றும் 716 துணை மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், தாலுகா மற்றும் பொது மருத்துவமனைகள் போன்ற ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை பெரிய அளவில் இல்லை. இந்த மையங்களில், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 94% முதல் 98% வரை மருத்துவர்கள் இருப்பதாக CAG அறிக்கை குறிப்பிடுகிறது.

kerala doctor health

இருப்பினும், மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் (குறிப்பாக அனைத்து மருத்துவ முறைகளின் கீழ் அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள்), அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுடன் ஒப்பீடு செய்தால் 35% முதல் 82% வரை மட்டுமே மருத்துவர்கள் இருந்தனர்.

"ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் கடுமையான டாக்டர்கள் பற்றாக்குறை காணப்பட்டது, அங்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட மருத்துவர்கள் 35% மட்டுமே இருக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமித்த பின்னரும், தணிக்கை காலத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 36% காலியாக இருந்தன," என்று CAG அறிக்கை குறிப்பிடுகிறது.

வழக்கம்போலவே கேரளாவில் புவியியல் ஏற்றத்தாழ்வை மருத்துவர் பற்றாக்குறையும் சுட்டிக் காட்டுகிறது. அதிகபட்ச காலியிட நிலை (13%), காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய வடக்கு அதாவது மலபார் மாவட்டங்களில் காணப்பட்டது.

மாநிலம் முழுவதும் மக்கள்தொகைக்கு ஈடாக மருத்துவர்கள் நியமிக்கப்படுவதில் பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. பெஸ்ட் மாவட்டம் என்றால் பத்தினம்திட்டாதான். பத்தினம்திட்டா மாவட்டத்தில் விகிதம் 1:3,411 ஆக இருக்கிறது. அதாவது, 3,411 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். ஆனால் கேரளாவின் வடக்கே அமைந்துள்ள மாவட்டமான, மலப்புரம் மாவட்டத்தில் இது 1:7,103 ஆக இருந்தது. கேரளாவிலேயே மலப்புரம்தான் டாக்டர்கள் எண்ணிக்கையில் மோசமான நிலையில் உள்ளது.

மாவட்டங்கள் மற்றும் டாக்டர்கள்-மக்கள் தொகைக்கான விகிதம் இதோ: வயநாடு (1:3930); இடுக்கி (1:4315); கோட்டயம் (1:4701); ஆலப்புழா (1:4760); காசர்கோடு (1:4860); திருவனந்தபுரம் (1:5158); கண்ணூர் (1:5267); எர்ணாகுளம் (1:5799); கொல்லம் (1:6290); திருச்சூர் (1:6293); பாலக்காடு (1:6722); மற்றும் கோழிக்கோடு (1:7245)

4,000 க்கும் குறைவான மருத்துவர்-மக்கள்தொகை விகிதம் அதாவது 4 ஆயிரம் மக்களுக்கு 1 டாக்டர் என்பது, நல்ல விகிதமாக கருதப்படுகிறது; பத்தனம்திட்டா மற்றும் வயநாடு மட்டுமே இந்த லிஸ்டுக்கு தகுதி பெறுகின்றன.

4,000 மற்றும் 6,000 க்கு இடையில் விகிதாச்சாரம் இருப்பது "மோசமானதாக" கருதப்படுகிறது. இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, காசர்கோடு, திருவனந்தபுரம், கண்ணூர் மற்றும் எர்ணாகுளம் ஆகிய ஏழு மாவட்டங்கள் இந்த பிரிவில் வருகின்றன. 6,001 மற்றும் 7,000 க்கு இடையில் விகிதாச்சாரம் இருந்தால், "மிகவும் மோசமானதாக" கருதப்படுகிறது; கொல்லம் மற்றும் திருச்சூர் இதில் அடங்கும். 7,000 க்கும் அதிகமான விகிதம் "படு மோசமானதாக" கருதப்படுகிறது. மலப்புரம் மற்றும் கோழிக்கோடு இதில் அடங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+