கேரளா உள்ளாட்சி தேர்தல்.. இடதுசாரி கூட்டணி வரலாற்று வெற்றியை பெறும்- கொடியேறி பாலகிருஷ்ணன்
திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியை பெறும் என கட்சியின் முன்னாள் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்கள். 941 பஞ்சாயத்துகளில் 442 பஞ்சாயத்துகளில் இடதுசாரிகளும் 344 பஞ்சாயத்துகளில் காங்கிரஸும் 33 பஞ்சாயத்துகளில் பாஜக கூட்டணியும் முன்னிலை வகித்து வருகிறது.
திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு மாநகராட்சிகளில் ஆளும் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. அடுத்த இடத்தில் பாஜக இருந்து வருகிறது. பாலக்காடு மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
தங்கக் கடத்தல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளும் பினராயி அரசின் மீது எதிர்க்கட்சிகள் வைத்திருந்தாலும் அத்தனையையும் தவிடுப்பொடியாக்கிய இடதுசாரி ஜனநாயக கூட்டணி வெற்றி பாதையில் செல்கிறது. இந்த தேர்தலில் வரலாற்று சாதனையை படைப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்துல்ளார்.












Click it and Unblock the Notifications