ஈராக் யூத வம்சம்.. யார் இந்த கேரள நனாயா கிறிஸ்தவர்கள்? ஒரே மதமானாலும் வேறு பிரிவில் மணம் முடிக்க தடை
திருவனந்தபுரம்: கேரளாவில் நனாயா கதோலிகர் என்ற கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர்கள் வேறு சமூகத்தினரை திருமணம் செய்துகொள்ள தடை உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி இன்று திருமணம் நடக்கிறது. யார் இந்த நனாயா கதோலிகர்கள்? இத்தகைய கட்டுப்பாடுகளை அவர்கள் விதித்தது ஏன்? விரிவாக பார்ப்போம்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது கொட்டோடி கிராமம். இங்குள்ள புனித சேவியர் சைரோ மலபார் தேவாலயத்தில் இன்று நடைபெறும் திருமணம் பற்றிதான் அம்மாநிலம் முழுவதும் பேச்சாக உள்ளது. ஜஸ்டின் ஜான் மற்றும் விஜிமோல் ஆகியோரின் இந்த திருமணம் இந்த அளவு பிரபலமாக காரணம் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்துவர்கள் பின்பற்றும் ஒரு கட்டுப்பாடுதான்.

ஆம், இப்பகுதியில் நனாயா கத்தோலிகர் என்ற கிறிஸ்துவ பிரிவினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பிரிவுக்கு உள்ளேயே திருமண உறவை வைத்துகொள்வது வழக்கம். மணமகனோ, மணமகளோ கிறிஸ்துவராக மட்டுமல்ல, கத்தோலிக பிரிவு கிறிஸ்துவராக இருந்தாலும் நனாயா கத்தோலிகர்கள் திருமண உறவை வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
அதையும் மீறி வேறு பிரிவை சேர்ந்த ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்துகொண்டால், தேவாலயத்தை விட்டே அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்கு அஞ்சியே பலரும் பிற சமூக கிறிஸ்துவர்களுடன் திருமணம் செய்துகொள்வது கிடையாது. இந்த நிலையில்தான் மணமகன் ஜஸ்டின் ஜான் மற்றும் மணமகள் விஜிமோலின் திருமணம் புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது,
மணமகன் ஜஸ்டின் ஜான் நனாயா கத்தோலிகர் பிரிவை சேர்ந்த கிறிஸ்துவராவார். மணமகள் விஜிமோல் அந்த சமூகத்தவர் இல்லை. அவர் சாதாரண கத்தோலிக கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் சமூக தடைகளை மீறி திருமணம் செய்துகொள்ள முயன்று இருக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. அதை தொடர்ந்து ஜஸ்டின் ஜானின் நனாயா புதிய ஆனீஸ் தேவாலயம் மற்றும் விஜிமோலின் புனித சேவியர் சைரோ மலபார் தேவாலயங்களில் இருவரது திருமணம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மணமகள் நனாயா பிரிவை சேர்ந்தவர் இல்லை என்று அறிந்த புதிய ஆனீஸ் தேவாலயம் இந்த திருமணத்துக்கு தடையாக மாறியது.
திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து முடிந்து அனைவருக்கும் அழைப்பு விடுக்கபட்டு, நிகழ்ச்சிக்கு தயாராக இருந்த நிலையில், திருமண நாளன்று மாலை, புதிய ஆனீஸ் தேவாலயம் திருமண சான்றிதழை வழங்க மறுத்து இருக்கிறது. இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே சைரோ மலபார் தேவாலயத்திலும் திருமணம் செய்ய முடியும்.

இது தொடர்பாக கோட்டயம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கால் இவர்களுக்கு ஆறுதலாக முடிவு கிடைத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேறு பிரிவை சேர்ந்தவர்களை திருமணம் செய்வதால் யாரையையும் சமூகத்தைவிட்டு ஒதுக்கி வைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மணமகன் ஜஸ்டின் திருமணத்துக்கு பிறகும் நனாயா தேவாலய சமூக உறுப்பினராகவே தொடர்வார் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து இன்று இருவருக்கும் சைரோ மலபார் தேவாலயத்தில் திருமணம் நடைபெறுகிறது. நனாயா கத்தோலிகர் பிரிவு கிறிஸ்துவர்களை பொறுத்தவரை அவர்கள் தங்களை யூத - கிறிஸ்துவ சமூகத்தில் இருந்து வந்தவர்களாக நம்புகிறார்கள். தற்போது ஈராக் என்று அழைக்கப்படும் அன்றைய மெசபொடாமியாவில் இருந்து AD 345 காலகட்டத்தில் இவர்கள் கேரளாவுக்கு குடிபெயர்ந்ததாக சொல்கிறார்கள்.
பிரபல வர்த்தகரான நாய் தொம்மன் எனப்படும் (கனாவின் தாமஸ்) பெயரில் இருந்தே நனாயா என்ற பெயர் மருவி வந்ததாக தெரிவிக்கிறார்கள். இவர் தலைமையிலேயே ஈராக்கில் இருந்து தாங்கள் கேரளாவுக்கு வந்ததாக சொல்கிறார்கள். இதன் காரணமாக நனாயா கதோலிகர் என்று அழைக்கப்படும் இந்த கிறிஸ்துவர்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் சமூகத்திற்கு உள்ளேயே திருமணம் செய்யும் வழக்கத்தை கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வழிமுறைக்கு அந்த சமூகத்தை சேர்ந்த சிலரே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நனாயா கத்தோலிகர் நவீகரானா சமிதி (KCNS) என்ற அமைப்பு இந்த வழிமுறைக்கு எதிராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாகவே தற்போது ஜஸ்டினும் விஜிமோலும் தங்கள் தேவாலய உறுப்பினர் உரிமையை இழக்காமல் திருமணம் செய்ய முடிந்திருக்கிறது.

நனாயா கதோலிகர்கள் இன்னும் பல பழங்கால சடங்குகளை பின்பற்றி வருகிறார்கள். குறிப்பாக கலப்பு திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளை தூய்மையற்ற இரத்தம் என்று அழைக்கும் இவர்கள், அந்த குடும்பத்தையே தேவாலயத்தை விட்டு ஒதுக்கி வைப்பது வழக்கமாக உள்ளது. இதேபோல் தேவாலயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட நனாயா கதோலிகர்கள் பலர் ஜஸ்டின் - விஜிமோலின் இந்த புரட்சிகர திருமணத்தில் பங்கேற்க வந்துள்ளனர்.
இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் தெரிவிக்கையில், "நனாயா தேவாலயத்தின் திருமண சான்றிதழை வழங்காததே பிரச்சனைக்கு காரணம். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நடைபெறும் முதல் திருமணம் இதுதான். இதனால் சற்று பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நாங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளோம்." என்றார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications