கேரளாவில் மே 23 வரை லாக்டவுன் நீட்டிப்பு.. 4 மாவட்டங்களில் "டிரிபிள் லாக்டவுன்".. பினராயி அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் மே 23ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில் கேரளாவில் மிக மோசமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தினமும் 35 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் கேரளாவில் பதிவாகி வந்தது.
நேற்று கொஞ்சம் கொரோனா கேஸ்கள் குறைவான நிலையில் இன்றும் கொரோனா கேஸ்கள் கொஞ்சம் சரிந்துள்ளது . கேரளாவில் இன்று 34694 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 93 பேர் இன்று கேரளாவில் கொரோனா காரணமாக பலியானார்கள்.

கேரளா
கேரளாவில் இதுவரை மொத்தமாக 6243 பேர் பலியாகி உள்ளனர். 31319 பேர் இன்று கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். கேரளாவில் மொத்தமாக 1636790 பேர் குணமடைந்து உள்ளனர். கேரளாவில் மொத்தமாக 20,50,890 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக்டிவ் நோயாளிகளாக 4,38,909 பேர் உள்ளனர்.

லாக் டவுன்
இந்த நிலையில் கேரளாவில் மே 16ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த லாக்டவுன் தற்போது மே 23ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கேஸ்கள் குறையாத காரணத்தாலும், பாசிட்டிவிட்டு ரேட் இன்னும் குறையாத காரணத்தாலும் லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

நீட்டிப்பு
அதோடு கேரளாவில் 4 மாவட்டங்களில் டிரிபிள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரிபிள் லாக்டவுன் என்றால் கூடுதல் கட்டுப்பாடுகளோடு, மக்கள் மொத்தமாக வெளியே வராத அளவிற்கு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், திரிச்சூர், மலாபுரத்தில் இந்த கூடுதல் கட்டுப்பாடுகளோடு லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏன்
இந்த மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகம் உள்ளது. திருவனந்தபுரத்தில் 42600 , எர்ணாகுளத்தில் 69227 திரிச்சூரில் 55255, மலாபுரத்தில் 49,887 ஆக்டிவ் கேஸ்கள் நேற்று வரை இருந்தன. இங்கு டிபிஆர் சதவிகிதம் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே இங்கு கூடுதல் கட்டுப்பாடுகளோடு லாக்டவுன் போடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications