மறுபடியும் மொதல்ல இருந்தா? வந்தாச்சு லாக்டவுன்! அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. கதிகலங்கி நிற்கும் கேரளா!
திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 14 வயது சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சிலர் மர்ம காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தனர். அவர் திடீரென உயிரிழந்த நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், உயிரிழந்தவர்கள் நிபா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அச்சுறுத்தல் மேலெழுந்திருக்கிறது. மலப்புரம் மாவட்டத்தில் 14வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனை கேரளாவில் உள்ள ஆய்வகங்கள் உறுதி செய்திருக்கின்றன. இருப்பினும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வுகத்தின் முடிவுக்காக காத்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "மலப்புரம் மாவட்டம் பாண்டிகாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் சிறுவனுக்கு நிபா பாதிப்பு இருப்பது தெரியவந்தாலும், புனே தேசிய வைராலஜி நிறுவனத்திடம் இருந்து இறுதி உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம்.
நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க மலப்புரத்தில் கட்டுப்பாட்டு அறையை சுகாதாரத் துறை அமைத்திருக்கிறது. மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாண்டிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சில வார்டுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications