கேரளாவிலும் கால் பதிக்கும் பாஜக! ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸின் யுடிஎஃப்.. இந்தியா டுடே கணிப்பு
திருவனந்தபுரம்: லோக் சபா தேர்தல் 2024ல் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 முதல் 18 இடங்களில் வெல்லும் என இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் பாஜக கூட்டணி இரண்டு முதல் மூன்று இடங்களில் வெல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
18வது மக்களவை தேர்தல் கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், கேரள காங்கிரஸ் (மாணி), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கேரள காங்கிரஸ் (பி), இந்திய தேசிய லீக், மதச்சார்பற்ற காங்கிரஸ், ஜனஅதிபத்ய கேரள காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் (ஜேகப்), கேரள ஜனநாயகக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, புரட்சிகர மார்க்ஸிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது மட்டும் அல்லாமல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கேரளாவில் களம் கண்டது. இந்த நிலையில் இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி யுடிஎஃப் கூட்டணி 17 முதல் 18 இடங்களில் வெற்றி பெறும் எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் எல்டிஎப் கூட்டணி பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு இடத்தில் மட்டுமே வெல்லும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 16 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 37 சதவீத வாக்குகளை பெற்று 15 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 5 சதவீத வாக்குகளுடன் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல அந்த கூட்டணியில் இருந்த கேரளா காங்கிரஸ்(மாணி) ஒரு தொகுதியிலும், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அந்த வகையில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் அந்த கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 25 சதவீத வாக்குகளை பெற்றிருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 18 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தற்போதைய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளிலும்,பாரதீய ஜனசேனா நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் கருத்துக்கணிப்புகளின் படி பாஜக கேரளாவில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளில் வெல்லும் என்பதால் அந்த கட்சி கேரளாவிலும் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications