திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் திருச்சூர் பூரம் திருவிழா கெடுபிடிகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளன. திருச்சூர் பூரம் திருவிழா கெடுபிடிகள் அரசியல் விவகாரமாகவும் உருவெடுத்துள்ளது.
கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழா சர்வதேச அளவில் புகழ் பெற்றது. திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். 50-க்கும் மேற்பட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு முத்துக்குடை பரிமாறும் 36 மணிநேர திருவிழாவும் வாணவேடிக்கையும் புகழ் பெற்றது. இத்திருவிழாவை காண வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஒரே கட்டமாக நாளை 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் கேரளா மாநில போலீசார் திருச்சூர் பூரம் திருவிழா நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க நேரிட்டது. ஏப்ரல் 20-ந் தேதி இரவு நடத்தப்பட வேண்டிய வாண வேடிக்கை நிகழ்ச்சி பகலிலேயே நடத்தும் நிலைமையும் உருவானது. முந்தைய நாள் பூரம் திருவிழா நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலைமையும் உருவானது. இதுதான் இப்போது பெரிய சர்ச்சையாகிவிட்டது. அத்துடன் அரசியல் விவகாரமாகவும் உருவெடுத்துவிட்டது.
திருச்சூர் பூரம் திருவிழாவுக்கான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து திருச்சூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி நேரடியாக களம் இறங்கினார். திருச்சூர் கோவில் நிர்வாகத்துடன் கலந்து பேசி வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். இது ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.
இதனால் திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக உத்தரவிட்டார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ, திருச்சூரில் பாஜகவின் வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபியை வெற்றி பெற வைக்கவே இப்படியான ஒரு சிக்கலை உருவாக்கி பாஜகவுக்கு ஆதரவான நிலைமையை இடதுசாரி அரசாங்கம் உருவாக்கியது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
திருச்சூர் லோக்சபா தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி, சிபிஐ சுனில் குமார், காங்கிரஸின் மூத்த தலைவர் முரளீதரன் களம் காண்கின்றனர். திருச்சூர் லோக்சபா தொகுதியில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதாபன் 39.83%; சிபிஐ ராஜாஜி மேத்யூ தாமஸ் 30.85%; பாஜகவின் சுரேஷ் கோபி 28.19% வாக்குகளைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications