Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'96' ஸ்டைலில் ரீயூனியன் மீட்.. 50 வயதில் துளிர்த்த காதல்.. ஓட்டம் பிடித்த ஜோடி..குடும்பத்தினர் ஷாக்!

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் 50- வயதை தாண்டிய காதல் ஜோடி தலைமறைவாகியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி பருவ நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் "ரி யூனியன்" நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பள்ளி பருவத்தில் காதலித்த ஒரு ஜோடிக்கு மீண்டும் காதல் மலர்ந்ததால் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த செய்தி குறித்த விவரத்தை இங்கே காணலாம்.

தமிழில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் 96. இந்த படத்தில் பள்ளி பருவத்தில் ராம் - ஜானி ஆகிய இருவரும் காதலித்து இருப்பார்கள்.

பிறகு பல வருடங்கள் கழித்து நடைபெறும் பழைய மாணவர்கள் சந்திப்பில் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது அவர்களுக்குள் இருந்த காதலை ரசிக்கதக்க வகையில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால்

பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால்

இந்த நிலையில், கேரளாவில் இதே போன்று ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதாவது, 35 ஆண்டுகளுக்கு பின்பு பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் 50- வயதை தாண்டிய காதல் ஜோடி தலைமறைவானார்கள். இதனால், அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் தொடுத்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்த முழு விவரம் வருமாறு:-

96 திரைப்பட பாணியில் சந்திப்பு

96 திரைப்பட பாணியில் சந்திப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அங்கு படித்த முன்னாள் மாணவ- மாணவிகளின் சந்திப்பு நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியில் படித்த மாணவர்களின் இந்த சந்திப்பு 'ரி யூனியன்" என்ற பெயரில் நடைபெற்றது. தமிழகத்தில் மிகவும் பிரபலமான 96 திரைப்பட பாணியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 35 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பழைய நண்பர்களை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் பலரும் மகிழ்ச்சியுடன் வந்திருந்தனர்.

பள்ளி பருவத்தில் ஆசிரியரிடம் அடி வாங்கியது

பள்ளி பருவத்தில் ஆசிரியரிடம் அடி வாங்கியது

தற்போது அனைவரும் 50 வயதை தாண்டிவிட்ட போதிலும் பள்ளி பருவ நண்பர்களை பார்த்த மகிழ்ச்சியில் இளம் வயதினரை போல மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர். நண்பர்களுடன் தங்கள் பள்ளி பருவத்தில் ஆசிரியரிடம் அடி வாங்கியது... என பழைய நினைவுகளை மிகவும் சுவாராசியமாக அசை போட்டு இருந்துள்ளனர். இந்த ரீ யூனியன் சந்திப்பில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு முன்னாள் மாணவரும் இடுக்கியை சேர்ந்த ஒரு முன்னாள் மாணவியும் பங்கேற்று இருந்துள்ளனர்.

பள்ளி பருவத்தில் காதல்

பள்ளி பருவத்தில் காதல்

இவர்கள் இருவரும் பள்ளி பருவ காலத்தில் காதலித்ததாக கூறப்படுகிறது. படிப்பு முடிந்த பிறகு அவர்கள் இருவரும் பெற்றோர் விருப்பப் படி வேறு வேறு நபர்களை திருமணம் செய்து விட்டு பிரிந்து விட்டனர். அதன்பிறகு அவர்களுக்குள் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இருவரும் அவரவர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இருவருக்குமே தற்பொது 50 வயது ஆகிவிட்டதாம்.

காதலர்கள் இருவரும் தலைமறைவு

காதலர்கள் இருவரும் தலைமறைவு

இந்த நிலையில் தான், பள்ளிகால நண்பர்கள் சேர்ந்து ரீ யூனியன் மீட் என்ற பெயரில் பள்ளி பருவ நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்து இருக்கின்றனர். இதில் மேற்கூறிய முன்னாள் காதல் ஜோடிகள் இருவரும் கலந்து கொண்டு இருந்தனர். 35 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்து இருக்கின்றனர். இந்த சந்திப்பு பழைய காதல் மீண்டும் துளிர் விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முன்னாள் காதலர்கள் இருவரும் தலைமறைவானார்கள். ரீ யூனியன் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்னும் வீடு திரும்பவில்லையே என்று இரு வீட்டினரும் தேடிக்கொண்டு இருந்து இருக்கின்றனர்.

இருவரின் குடும்பத்தினரும் போலீசில் புகார்

இருவரின் குடும்பத்தினரும் போலீசில் புகார்

வெகு நேரம் ஆகியும் திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் குடும்பத்தினர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் தொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான காதல் ஜோடியை தேடி வருகின்றனர். கணவரைக் காணவில்லை என்று மனைவியும், மனைவியை காணவில்லை என்று கணவரும் புகார் தொடுத்து இருக்கிறார்கள்.. இத்தனைக்கும் ஓடிப்போன இந்த காதல் ஜோடி இருவருக்குமே பிள்ளைகள் இருக்கிறார்கள்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+