கேரள படகு விபத்து வரலாற்றிலேயே.. மிகவும் மோசமானது மலப்புரம் விபத்துதான்!.. காரணம் என்ன?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியான சம்பவம்தான் கேரளா வரலாற்றில் நடந்த மிக மோசமான படகு விபத்து ஆகும்.
கேரளா மாநிலம் மலப்புரத்தை அடுத்த தானூர் அருகே ஓட்டும்புரத்தில் நேற்று இரவு தூவல் தீர்த்தம் ஆற்றில் 40 பேருடன் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு கடலும் ஆறும் சங்கமிக்கும் இடமான பரப்பனங்காடி கடற்கரை பகுதி அருகே சென்ற போது அந்த படகு திடீரென தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இதுவரை 22 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள் ஆவர். படகு கவிழ்ந்ததும் அங்கிருந்த மீனவர்கள் சிலர் நீச்சல் அடித்து சிலரை காப்பாற்றியுள்ளனர். கேரளாவில் கோடை விடுமுறைக்காக சுற்றுலா பயணிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர்கள் கோட்டக்கல்லில் உள்ள மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியவர்களை கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை இணைந்து மீட்பு நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள்.
மீட்பு பணிகள் இன்னமும் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர்பாக தானூரை சேர்ந்த படகு உரிமையாளர் நாசர் என்பவர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி உள்ளதாக போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
படகு உரிமையாளர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலா படகுகளுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்த படகு விபத்து வரலாற்றில் தானூர் அருகே 22 பேரின் உயிரை குடித்த விபத்துதான் மிகவும் மோசமானது என்கிறார்கள்.
கடந்த 1924 ஆம் ஆண்டுப ஜனவரி 24 ஆம் தேதி பல்லனா ஆற்றில் கவிஞர் குமரன் ஆசான் உள்ளிட்ட 151 பயணிகளுடன் சென்ற படகு விபத்தில் சிக்கி 23 பேர் பலியாகிவிட்டனர்.

அது போல் 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி தட்டேகாடு பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற 3 படகுகளில் ஒன்று விபத்தில் சிக்கியதால் 18 பேர் பலியாகிவிட்டனர். இந்த படகில் பள்ளி சிறுவர்கள் உள்பட 37 பேர் இருந்தனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடுக்கி மாவட்டம் தேக்கடியில் மணிக்கவலா பகுதியில் ஜலகன்யகா என்ற படகு விபத்தில் சிக்கியதில் 45 பேர் பலியாகிவிட்டனர். இவர்கள் 7 பேர் குழந்தைகள், 23 பேர் பெண்கள். இந்த விபத்து ஏற்பட்டதற்கு காரணம் படகு முறையாக கட்டமைக்கப்படவில்லை, அதிக பாரம் ஏற்றிச் சென்றது, லைப் ஜாக்கெட் கொடுக்ககாதது என கண்டறியப்பட்டது.
இந்த கோர விபத்துகளை தொடர்ந்து தானூர் அருகே நடந்த விபத்தில் கூட 20 பயணிகளை ஏற்றும் படகில் 40 பயணிகளை ஏற்றியதே விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய்












Click it and Unblock the Notifications