மிரள வைத்த மலையாள சினிமா பிரபலங்கள்.. ராமர் கோயில் திறப்பு நாளில்.. சமூக வலைதளத்தில் சம்பவம்
திருவனந்தபுரம்: அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகள், இயக்குநர்கள் சமூக வலைதளங்களில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை படத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.
முகலாய மன்னர் பாபரால் அயோத்தியில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை கடந்த 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ அமைப்பினர் இடித்து தள்ளினர். பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் கோயில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று பிரதமர் மோடி கோயிலை திறந்து வைத்து இருக்கிறார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொள்ளாத பலரும் ராமர் கோயில் திறப்பு விழாவை வாழ்த்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் இன்று மலையாள திரையுலகினர் சமூக வலைதளத்தில் சம்பவம் செய்து உள்ளார்கள்.
ஆம், இந்திய அரசியலமைப்பின் முன்னுரை படத்தை கேரள சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இன்று பகிர்ந்து இருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டு செல்ல வேண்டும் என்றால் பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரபல மலையாள நடிகை பார்வதி திருவொத்து, தமிழில் கோ, மலையாளத்தில் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகையும், தயாரிப்பாளருமான ரீமா கல்லிகல், தமிழில் கயல், கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் மலையாளத்தில் மாலிக், ஃபேமிலி உள்ளிட்ட படங்களிலும் நடித்த திவ்ய பிரபா, தமிழில் பிசாசு, பர்மா, களம், ஸ்பைடர் உள்ளிட்ட படங்களும், மலையாளத்தில் படா, பிரியாணி உள்ளிட்ட படங்களிலும் நடித்த கனி கஸ்தூரியும் இதை பகிர்ந்து உள்ளார்.
As the Ram temple is being opened in Ayodhya today, leading actresses and directors of Malayalam cinema are sharing a picture of the Constitution of India on social media.அதேபோல் மலையாளத்தில் காதல் தி கோர், கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரும் நடிகருமான ஜியோ பேபி, வைரஸ், மாயநதி, நீலவெலிச்சம், நாரதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரும் நடிகருமான ஆஷிக் அபு, படா படத்தை இயக்கிய கமால் கே.எம்., பிரபல பாடகர் சூரஜ் சந்தோஷ் உள்ளிட்டோர் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் வேற்றுமையில் ஒற்றுமை, நம்பிக்கை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, சமத்துவம், அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பு குறித்து குறிப்பிடப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications