வாட்ஸ் ஆப்பில் பரவிய மனைவியின் அந்தரங்க படங்கள்.. அதிர்ந்த கணவர்.. நடந்தது இதுதான்!
பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை கண்டு கணவன் அதிர்ச்சி அடைந்தார்
Recommended Video
திருவனந்தபுரம்: மனைவியின் ஆபாச போட்டோவை வாட்ஸ்அப்பில் கண்டு அலறிவிட்டார் வெளிநாட்டில் இருக்கும் கணவர்!
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் இளம் மனைவியை தனியாக விட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த இளைஞரின் கம்ப்யூட்டரில் போட்டோக்கள், வீடியோக்கள் லிங்க் இருந்ததை கண்டார். அதனால் அதை டவுன்லோடு செய்து பார்த்தவருக்கு ஷாக்!
ஊரில் இருக்கும் தன் மனைவியின் அந்தரங்க படங்கள், டிரஸ் மாற்றுவது, என்று பல படங்கள் இருந்தன. இதை பார்த்து பதறிய கணவர், உடனே மனைவிக்கு போன் செய்து, இதை பற்றி கேட்டார். அதற்கு அந்த பெண், தனக்கு இதை பற்றி எதுவுமே தெரியாது, யாரோ வேணும்னே ரகசியமாக இதை எடுத்திருக்கலாம் என்று சொனன்ர்.
இதை கேட்டு இன்னும் அதிர்ந்த கணவர், வெளிநாட்டில் இருந்தபடியே கேரள சைபர் கிரைம் போலீசுக்கு புகார் தந்தார். எப்படியாவது மனைவியின் ஆபாச படங்களை அகற்றிவிடுங்கள் என்று கெஞ்சினார். இதையடுத்து, கேரள சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். முதலில் எங்கிருந்து இந்த போட்டோக்கள் அப்லோடு செய்யப்பட்டன என்பதை ஆராய்ந்தனர்.
எல்லா ஆபாச போட்டோவும், சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டில் இருந்துதான் பரவியிருக்கிறது என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பெட்ரூமில் ஸ்மார்ட் டிவி இருந்தது. அதை பற்றி போலீசார் கேட்டதற்கு, தினமும் கணவருடன் ஸ்கைப்பில் சேட் செய்வேன் என்றார்.
இதையடுத்து போலீசார் அந்த ஸ்மார்ட் டிவியை ஆராயந்தனர். அப்போதுதான், அதில் கேமரா ஆன் செய்யப்பட்டே இருந்திருக்கிறது தெரியவந்தது. அதாவது ராத்திரி நேரத்தில் கணவனுடன் சேட் செய்துவிட்டு, இந்த டிவியை மனைவி ஆஃ செய்யவில்லை. எப்படி ஆஃப் செய்வது என்றுகூட தெரியாமல் இருந்திருக்கிறார். அதனால்தான், துணி மாற்றுவது உட்பட எல்லாமே அதில் பதிவாகி இருந்திருக்கிறது.
இந்த காட்சிகள் அனைத்தையும் கணவரின் நண்பர் ஒருவர் அந்த கம்ப்யூட்டரை ஹேக் செய்து எடுத்து பரப்பியுள்ளதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். சைபர் கிரைம் போலீசார் மற்றும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் இதனை கண்டு பிடித்து அந்த பெண்ணிடம் நடந்த தவறை எடுத்துக் கூறினர். மேலும் ஸ்மார்ட் டி.வி.யில் ஸ்கைப் பயன்படுத்திய பின்பு அதன் செயல்பாட்டை எப்படி நிறுத்த வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினர். இது கூடவா தெரியாம இருப்பாங்க.. என்னம்மா நீங்க!












Click it and Unblock the Notifications