நள்ளிரவில் ஷாக்! கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து! தமிழக பக்தர்கள் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிய தமிழக பக்தர்கள் பயணித்த மினி பஸ் ஒன்று திருச்சூர்-பாலக்காடு நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளது. டிவைடரில் மோதி மினி பஸ் கவிழ்ந்த நிலையில், அதில் 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரது நிலைமை மிக மோசமாக உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை போட்டு விரதம் இருந்து, சபரி மலை கோயிலுக்கு சென்று திரும்புவார்கள். இந்தாண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு சென்று வருகிறார்கள்.

sabarimala kerala accident

ஐயப்ப பக்தர்கள்: குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று வருகிறார்கள். இதுபோல சபரிமலைக்கு செல்வோர் பெரும்பாலும் தனியாக கார் அல்லது வேன் வாடைக்கு எடுத்தே சென்று திரும்புகிறார்கள். சில நேரங்களில் இதுபோல சபரிமலை சென்று திரும்பும் வழியில் விபத்துகள் ஏர்படுகிறது. அப்படியொரு விபத்து தான் பாலக்காடு அருகே இப்போது நடந்துள்ளது.

திருச்சூர்-பாலக்காடு நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் சபரிமலை பக்தர்கள் சென்ற மினிபஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட சபரிமலை பக்தர்கள் காயமடைந்தனர்.

தமிழக பக்தர்கள்: இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் சபரிமலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​வடக்கஞ்சேரி அருகே உள்ள அஞ்சுமூர்த்திமங்கலத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அவர்கள் சென்ற மினிபஸ் டிவைடரில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பக்தர்களில் ஒருவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக கூற்பபடுகிறது. நள்ளிரவு நேரம் என்பதால் ஓட்டுநர் தூங்கியிருக்கலாம் என்றும் இதனால் மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியிருக்கலாம் என்று விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் கூறுகிறார்கள்.

போலீசார் நடவடிக்கை: விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது விபத்து தொடர்பாக வடக்கஞ்சேரி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், சாலையில் கிடந்த வாகனத்தை அகற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்து: இதே இடத்தில் கடந்த 2022ஆம் ஆண்டில் எேஎஸ்ஆர்டிசி பேருந்து ஒன்று சுற்றுலா பேருந்தில் மோதி மிக மோசமான விபத்து ஏற்பட்டு, அதில் ஒன்பது பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+