திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பினராயி விஜயன் பதவியேற்பு விழாவில், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள முதல்வராக பினராயி விஜயன் இன்று மீண்டும் பதவியேற்ற பதவியேற்பு விழாவில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

Recommended Video

    தமிழ்நாட்டை போல.. உளமாற உறுதி கூறி பதவியேற்ற.. Kerala CM Pinarayi Vijayan மற்றும் அமைச்சர்கள்!

    நடந்து முடிந்த கேரளா சட்டசபை தேர்தலில் 140 சட்டசபை தொகுதிகளில் எல்டிஎப் (இடதுசாரிகள்) கூட்டணி 99 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி வென்றது.

     Minister Thangam Thennarasu participated Pinarayi Vijayan cabinet oath taking ceremony

    இதையடுத்து, இன்று, பிற்பகல் 3.30 மணிக்கு கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றார். 3 பெண் அமைச்சர்கள் உட்பட 21 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.

    இந்த பதவியேற்பு விழாவுக்கு 500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதில் பங்கேற்றார்.

    முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் நேரில் சென்று வணக்கம் தெரிவித்து, வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. பதிலுக்கு பினராயி விஜயனும் கைகூப்பி வணங்கி வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.

    English summary
    Minister Thangam Thennarasu on behalf of the Government of Tamil Nadu participated in the cabinet oath taking ceremony of Pinarayi Vijayan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X