நடிகர் மம்மூட்டிக்கு கேன்சர்? அதிர்ந்துபோன ரசிகர் - ரசிகைகள்.. படக்குழு தந்த முக்கிய விளக்கம்
திருவனந்தபுரம்: மலையாள ‛மெகா ஸ்டார்' நடிகர் மம்மூட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் அவரது ரசிகர், ரசிகைகள் கவலையடைந்த நிலையில் நடிகர் மம்மூட்டி புதிதாக நடித்து வரும் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மலையாள ‛மெகா ஸ்டார்' நடிகர் மம்மூட்டி உள்ளார். மலையாளம் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடிகர் மம்மூட்டி நடித்து வருகிறார். தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் இந்தி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதனால் கேரளா, தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் மம்மூட்டிக்கு ஏராளமான ரசிகர், ரசிகைகள் உள்ளனர்.
தற்போது மம்மூட்டி புதிதாக மலையாள படத்தில் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் மலையாள ‛சூப்பர் ஸ்டார்' மோகன்லாலுடன், ‛மெகாஸ்டார்' மம்மூட்டி இணைந்து நடிக்கிறார். இதனால் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படப்பிடிப்பில் நடிகர் மம்மூட்டி பங்கேற்ற நிலையில் தற்போது அவர் பிரேக் எடுத்துள்ளார். இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் இணையதளங்களில் பரவி வருகிறது. அதாவது மம்மூட்டிக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் படப்பிடிப்பில் இருந்து அவர் பிரேக் எடுத்துள்ளார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
இதனால் மம்மூட்டி ரசிகர்கள் கவலையடைந்தனர். இப்படியான சூழலில் தான் மம்மூட்டி நடிக்கும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மம்மூட்டி படக்குழுவின் மக்கள் தொடர்பு அதிகாரி சார்பில், ‛‛மம்மூட்டி ரமலான் நோன்பு இருப்பதால் விடுமுறையில் உள்ளார். இதனால் சூட்டிங்கில் இல்லை. இந்த பிரேக்கிற்கு பிறகு மம்மூட்டி மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க உள்ளார்'' என்று கூறியுள்ளார். இதனால் மம்மூட்டி ரசிகர், ரசிகைகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நடிகர் மம்மூட்டி - மோகன்லால் ஆகியோர் சேர்ந்து நடிக்கும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்க மோகன்லால், மம்மூட்டி நடிக்கின்றனர். இனால் அவர்கள் 3 பேரின் பெயரிலும் முதலில் வரும் ஆங்கில எழுத்தான எம்-யை எடுத்து MMM என்று இந்த திரைப்படம் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி, மோகன்லாலுடன், நடிகர்கள் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நடிகைகள் நயன்தாரா, தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications