கேரளாவின் வளர்ச்சிக்காக ஃபாஸ்ட்(FAST) என்ற வாக்குறுதியை கொடுத்த பிரதமர் மோடி.. அது என்னனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கேரள தேர்தலுக்காக பாஜக சார்பில் ஃபாஸ்ட்(FAST) என்ற வாக்குறுதியை மோடிமுன்மொழிந்தார்.

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு அப்பாவி பக்தர்கள் மீது தடியடி நடத்தியது என்றும் காங்கிரஸ் கூட்டணி இதை அமைதியாக வேடிக்கை பார்த்தது என்றும் மோடி குற்றம்சாட்டினார்.

கேரளாவில் தேர்தல்

கேரளாவில் தேர்தல்

கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி (​எல்டிஎப்) கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. ஏதாவது அதிசயம் நிகழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கி உள்ளது.

தீவிர பிரசாரம்

தீவிர பிரசாரம்

சில மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மேலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகளும் இடதுசாரி ஆட்சியே மீண்டும் அமையும் என்று கூறியுள்ளதால், இடதுசாரி ஜனநாயக முன்னணி (​எல்டிஎப்) கூட்டணி உற்சாகத்தில் உள்ளது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 சபரிமலை குறித்து பேசிய மோடி

சபரிமலை குறித்து பேசிய மோடி

ஒரு வாரத்துக்கு முன்பு கேரளாவில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபரி மலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக தாக்கி பேசினார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரள மாநிலம் பாலக்காட்டில் பா.ஜ.க நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு அப்பாவி பக்தர்கள் மீது தடியடி நடத்தியது என்றும் காங்கிரஸ் கூட்டணி இதை அமைதியாக வேடிக்கை பார்த்தது என்றும் குற்றம்சாட்டினார்.

 ஃபாஸ்ட்(FAST) எனும் வாக்குறுதி

ஃபாஸ்ட்(FAST) எனும் வாக்குறுதி

அப்போது கேரள தேர்தலுக்காக பாஜக சார்பில் ஃபாஸ்ட்(FAST) என்ற வாக்குறுதியை மோடிமுன்மொழிந்தார்.
அதாவது F - fisheries(மீன்வளம்) and fertilisers(உரங்கள்) என்றும் A - Agriculture(விவசாயம்) and Ayurveda(ஆயுர்வேதம்), S - Skill development(திறன் மேம்பாடு) and Social justice( சமூக நீதி), T - Tourism(சுற்றுலா) and Technology(தகவல் தொழில்நுட்பம்) ஆகிய துறைகள் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஃபாஸ்ட்(FAST) ஆக செய்லபடுத்தப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+