கேரளாவை மிரளவிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை! இனி ‘அம்மா’வே வேண்டாம்.. மோகன்லால் என்ன இப்படி சொல்லிட்டார்?
திருவனந்தபுரம்: ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' பொறுப்பிலிருந்து மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் விலகி இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்த அமைப்பில் எந்த பொறுப்பையும் தான் ஏற்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார் நடிகர் மோகன்லால்.
மலையாளம் மட்டுமல்ல இந்திய திரை உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மல்லுவுட் என அழைக்கப்படும் மலையாள திரை உலகில் நடிகர்கள் இயக்குனர்கள் நடிகைகளை பாலியல் இச்சைக்காக பயன்படுத்திக் கொண்டதும், மறுத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி வைத்ததும்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் ஒருவரே ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து இந்த வழக்கு தற்போது வரை நடந்து வருகிறது. சமீபத்தில் கூட இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு பிறகாக மலையாள திரையுலகில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடிகைகள், நடிகர்கள் இயக்குனர்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது, மறுத்தவர்கள் திரை உலகில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக பகீர் புகார் எழுந்தது.
இதை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் நடிகைகளும் இடம் பெற்று இருந்தனர். இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை ஐந்தாண்டுகளுக்கு முன்னரே தாக்கல் செய்தது. ஆனால் தற்போது தான் அது வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையில் மலையாளத் திரை உலகை சில இயக்குனர்கள் நடிகர்கள் முடிசூடா மன்னர்கள் போல ஆண்டு வந்ததும், நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரிய வந்தது.
இந்த அறிக்கை வெளிவந்ததிலிருந்தே பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. தொடர்ந்து மலையாள சினிமாவில் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்ட நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிகிறது. இதை அடுத்து மலையாள நடிகர் சங்கமான அம்மா கூட்டம் கூட்டப்பட்டு நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் மோகன்லால். மேலும் பல நடிகர்கள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு மலையாள திரை உலக நடிகர்கள் சங்கமான 'அம்மா'வுக்கு தேர்தல் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த செயற்குழு தொடர வேண்டுமென முன்னாள் துணைத் தலைவரான ஜெயன் சேர்தாலா கூறியிருந்தார். அவரது கருத்தையே மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபியும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அம்மா அமைப்பின் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட எந்த பதவியையும் தான் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தெளிவாக கூறியுள்ளார் நடிகர் மோகன்லால். ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின் மலையாள திரையுலகில் பாலியல் சர்ச்சை வெடித்த நிலையில் எல்லோரும் அம்மா அமைப்பையே குறை கூறினார்கள். எல்லோரும் சேர்ந்து தான் அம்மா அமைப்பு.
ஆனால் ஒருவர் மீது எழுந்த புகாருக்காக ஒட்டுமொத்தமாக அம்மா அமைப்பை குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அந்த அமைப்பில் எந்த பதவியையும் தான் ஏற்கப் போவதில்லை என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தேர்தலில் அம்மா அமைப்புக்கு புதிய தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications