கும்பமேளா பேமஸ் மோனாலிசா மைனர்! வெளியான ஷாக் தகவல்.. சர்ச்சையை கிளப்பிய விஎச்பி!
திருவனந்தபுரம்: உத்தரப் பிரதேசத்தின் கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் பேமஸானவர்தான் இளம்பெண் மோனாலிசா. இவருக்கும், கேரளாவை சேர்ந்த பர்மான்கான் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணம் தொடர்பான டாப்பிக் சோஷியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், மோனாலிசாவுக்கு வயது 16தான் ஆகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோனாலிசாவுக்கு 18 வயது இல்லை, வெறும் 16 வயதுதான் என மத்திய பிரதேச அரசால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பிறப்புச் சான்றிதழை விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ளது.

இந்தூரில் பிறந்த மோனாலிசாவுக்கும், கேரளாவை சேர்ந்த பர்மான்கானுக்கும் மார்ச் 11 ஆம் தேதி திருவனந்தபுரம் அருமனூர் நைனார் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. எம்.வி. கோவிந்தன், வி. சிவன்குட்டி, ஏ.ஏ. ரஹீம் போன்ற முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர். மோனாலிசா கடந்த ஆண்டு ஜனவரி 21 அன்று தனது 16வது பிறந்தநாளைக் கொண்டாடியதாக, விஹெச்பி பொதுச்செயலாளர் அனில் விலாயில் ஏற்கனவே டி.ஜி.பி.யிடம் புகார் அளித்திருந்தார்.
திருமணத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் தம்பதியினர் தங்கள் வயது குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்தனர். திருவனந்தபுரம் தம்பனூர் போலீசார், மோனாலிசாவின் வயது 18 என உறுதிப்படுத்திய பின்னரே திருமணத்திற்கு அனுமதி அளித்ததாகத் தெரிவித்தனர். ஆனால், புதிதாக வெளிவந்த பிறப்புச் சான்றிதழின்படி, அவரது பிறந்த தேதி டிசம்பர் 30, 2009, மாலை 5:30 மணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பார்த்தால், அவரது வயது 16 ஆண்டுகள், 2 மாதங்கள், 12 நாட்கள் தானாம். போபாலில் உள்ள வி.ஹெச்.பி தொண்டர்கள் இந்த ஆவணத்தைப் பெற்று வெளியிட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அனில் விலாயில் மேலும் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications