கேரளாவின் ரியல் 'சிங்கம்' போலீஸ்! வெட்ட பாய்ந்த இளைஞர்.. தட்டி தூக்கிய இன்ஸ்பெக்டர்! வீடியோ
திருவனந்தபுரம்: தன்னை கொலை செய்ய வந்த நபரிடம் இருந்து போலீஸ் அதிகாரி தப்பும் வீடியோ வைரலாகி உள்ளது.
போலீசாருக்கு எப்போது எங்கிருந்து யார் மூலம் ஆபத்து வரும் என யாருக்கும் தெரியாது. பொது இடங்களில் எப்போதும் விழிப்புடனேயே இருக்க வேண்டியது கட்டாயம்.
அதிலும் ரவுடிகளை கையாளும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

சிசிடிவி
இந்நிலையில், கேரளாவில் இப்படி நடந்த ஒரு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தான் இணையத்தில் வைரலாகி உள்ளது. தன்னை கொல்ல வரும் ரவுடியிடம் இருந்து போலீஸ் அதிகாரி ஒருவர் லாவகமாகத் தப்பும் சம்பவம் தான் இப்போது டிரெண்டங்கில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம் ஆலப்புழாவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கேரளா
கேரள மாநிலம் ஆலப்புழா, நூறநாடு பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளவர் அருண் குமார். இவர் அப்பகுதியில் வழக்கம் போல தனது வாகனத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தார். அப்போது ஒருவர் டூவிலரில் அருண் குமாரை பின்தொடர்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னை ஒருவர் பின்தொடர்வதை ஆய்வாளர் அருண்குமார் அறிந்து கொண்டதாக தெரிகிறது.

கொலை முயற்சி
இதனால் எதுவும் தெரியாதது போல போலீஸ் வாகனம் அருகே ஒரு இடத்தில் அந்த நபர் அமைதியாக நின்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அருண்குமார் அவரிடம் விசாரணை செய்ய வாகனத்தில் இருந்து இறங்கி உள்ளார். அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை வெட்ட முயன்றுள்ளார்.

சண்டை
இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஆய்வாளர் அருண்குமார் தடுக்க முயன்றார். சிறு போராட்டத்திற்குப் பின்னர், தன்னை வெட்ட வந்த நபரைக் கீழே தள்ளி அவரிடம் இருந்து அறுவாளை இன்ஸ்பெக்டர் அருண்குமார் பிடுங்கிக் கொண்டார். அதற்குள் அக்கம் பக்கத்தினரும் போலீஸ் கார் ஓட்டுநரும் அருகே வந்து அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

வீடியோ
அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சுகதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு போலீசாருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அருகே இருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது. மேலும் இதில் காயமடைந்த போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications