"கூலிங் கிளாஸ்.. கூலான ஸ்டெப்ஸ்.!" ஓணத்திற்கு கலக்கலாக ஆட்டம் போட்ட கேரள கலெக்டர்.. வீடியோ
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், கொல்லம் கலெக்டர் அப்சானா பர்வீன் கலக்கலாக டான்ஸ் ஆடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கேரள மக்களால் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் இருக்கிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது. அதிலும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் எல்லாம் களைக்கட்டும்.
ஓணம்: அப்படி கேரளாவில் நடந்த ஓணம் கொண்டாட்டம் ஒன்றின் வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. அங்குப் பிரபலமான ஓணப்பட்டின் தாளம் துள்ளும் என்ற பாடலுக்குக் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்த கலெக்டர் ஆடும் டான்ஸ் இப்போது இணையத்தைக் கலக்கி வருகிறது. இணையத்தில் பகிரப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளைக் கொண்டு டிரெண்டாகி வருகிறது.
ஓணம் கொண்டாட்டத்தில் கலெக்டர் அஃப்சானா பர்வீனின் நடனம் பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த வீடியோ இப்படி 24 மணி நேரத்திற்குள் டிரெண்டாகும் என்பதை நிச்சயம் அவரே கூட நினைத்திருக்க மாட்டார். அந்த நிகழ்ச்சியில் பல ஊழியர்கள் இருந்த நிலையில், அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பராக ஒரு டான்ஸை போட்டுள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் இந்த அஃப்சானா பர்வீன் மலையாளி இல்லை. இருந்த போதிலும், இவர் அட்டகாசமாக டான்ஸ் ஆடியிருக்கிறார்.
டான்ஸ்: அவரது இந்த டான்ஸை பார்த்து அங்கிருந்த அனைத்து ஊழியர்களும் காதை பிளக்கும் அளவுக்குக் கரகோஷம் எழுப்பினர். அதில் இருந்தே அவர் எந்தளவுக்கு பக்காவாக டான்ஸ் ஆடியிருக்கிறார் என்பது தெரிகிறது. அங்கு மட்டும் இல்லை.. நெட்டிசன்களும் கூட அவரது டான்ஸுக்கு ஹார்ட்டை அள்ளி தந்து வருகின்றனர். அஃப்சானா பர்வீனின் நடனத்தைப் புகழ்ந்து தள்ளி, கேரளாவிலேயே கூலான கலெக்டர் இவர் தான் என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இது குறித்து கலெக்டர் அஃப்சானா பர்வீன் கூறுகையில், "எனது ஊழியர்களை உற்சாகப்படுத்த நான் செய்த சின்ன முயற்சிதான் இது. நான் டான்சர் எல்லாம் இல்லை.. அதற்கு முந்தைய நாள் தான் எந்த பாடலுக்கு நடனமாடலாம் என முடிவெடுத்தேன். அதன் பிறகு எல்லாம் அவசர அவசரமாக நடந்தது. இது தான் எனது முதல் அனுபவம். எனது வாழ்க்கையிலேயே மறக்க முடியாது ஒன்றாக இது அமைந்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.
வீடியோ: மொத்தம் ஒரு நிமிடம் ஓடும் இந்த கலெக்டரின் டான்ஸ் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் முதல் சில நொடிகள் அவர் பாரம்பரிய நடனத்தைப் போல ஆடுகிறார். அதன் பிறகு அவரது ஸ்டெப்ஸ்கள் எல்லாம் தெறிக்க விடும்படி இருக்கிறது. கலெக்டர் பர்வீன் போடும் ஒவ்வொரு ஸ்டெப்ஸ்களுக்கும் கைத்தட்டல்கள் அள்ளுவதாகவே இருக்கிறது.
அவர் மேலும் கூறுகையில், "நான் ரொம்பவே எளிமையான ஸ்டெப்ஸ்களை தான் போட்டேன். இதன் காரணமாகவே அனைவராலும் இந்த பாடலை கனெக்ட் செய்து கொள்ள முடிந்துள்ளது. இப்போது இந்த வீடியோ டிரெண்டான நிலையில், உலகம் முழுக்க பலரும் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர். எனது குடும்பத்தினருக்கும் கூட இது மிக பெரிய ஒரு ஆச்சரியமாகவே இருந்தது. அவர்களும் கூட நான் இது ஆடி பார்த்ததே இல்லை..
ராஞ்சியை சேர்ந்த பர்வீன், கதகளி, திருவாதிரை உள்ளிட்ட அனைத்து கேரள ஸ்டைல் நடனங்களும் தனக்குப் பிடிக்கும் என்கிறார்.. அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றாக்கும் இந்த ஓணம் திருவிழா தனக்கு ரொம்பவே பிடித்த ஒன்றாக இருப்பதாகவும் கூறுகிறார். அவரது இந்த டான்ஸ் வீடியோ தான் இப்போது இணையத்தையே கலக்கி வருகிறது.
ONAM VIBE
— Raam Das (@P__RamDas) August 25, 2023
Afsana Praveen, District Collector, Kollam performing at the Onam Celebrations at Kollam Collectorate hall.#Kerala #Onam #Dance @DCsofIndia pic.twitter.com/K1anaqvkcA












Click it and Unblock the Notifications