‘தள்ளு தள்ளு தள்ளு’ தெரியும்.. ‘நில்லு.. நில்லு.. நில்லு’ தெரியுமா?
நில்லு நில்லு என்ற புதிய சவால் வைரலாகியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் நில்லு நில்லு நில்லு என்ற புதிய சேலஞ்ச் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், இதனால் விபத்துக்கள் ஏற்படலாம் என அம்மாநில காவல்துறை எச்சரித்துள்ளது.
அவ்வப்போது புதிய புதிய சவால்கள் பிரபலமாவதும், பின்னர் அவை காணாமல் போவதும் சமூகவலைதளங்களில் சகஜம். அந்தவகையில், சமீபத்தில் கிகி சாலஞ்ச் எனப்படும், ஓடும் காரில் இருந்து இறங்கி ஆடும் சவால் பிரபலமாக இருந்தது. இதனால் பலர் விபத்துக்களில் சிக்கினர். பின்னர் அந்த சவால் மீதான மோகம் குறைந்தது.
இந்நிலையில் தற்போது கேரளாவில் புதிதாக ஒரு சவால் வைரலாகியுள்ளது. அந்த சவாலுக்கு 'நில்லு நில்லு நில்லு' எனப் பேர் வைத்துள்ளனர்.

நில்லு நில்லு சாலஞ்ச்:
தலையில் ஹெல்மெட் அணிந்தபடி அல்லது கையில் காய்ந்த இலை மற்றும் குச்சிகளை பிடித்தபடி சாலையில் செல்லும் வாகனங்களை திடீரென வழி மறித்து, நடனமாடுவது தான் இந்த ‘நில்லு நில்லு சேலஞ்ச்'. இளைஞர்கள் பலர் இந்த சவாலை செய்து டிக்டாக் செயலியில் பதிவிட்டுள்ளனர்.

நடிகர்கள் வீடியோ:
மலையாள நடிகரான விஷ்ணு உன்னிகிருஷ்ணனும், மற்றொரு நடிகருடன் இணைந்து இந்த சவாலை நிறைவேற்றி தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பிரபலங்களும் இந்த சவாலை செய்து வருவதால், இது டிரெண்டிங் ஆகியுள்ளது.

பழைய பாடல்:
கடந்த 2004ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ரெயின் ரெயின் கம் ஏகெயின்' என்ற படத்தில் "நில்லு நில்லு" என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல், பெரும்பாலும் சாலையில் தான் படமாக்கப்பட்டது. நட்டநடு சாலையில் கல்லூரி வகுப்புகள் நடத்துவது, மாணவர்கள் ஆடுவது என இந்த பாடல் முழுக்க வேடிக்கையான விஷயங்கள் பல இருக்கும். தற்போது இந்தப் பாடலைத் தான் மீண்டும் பிரபலமாக்கியுள்ளனர்.

வேண்டுகோள்:
பார்ப்பதற்கு வேடிக்கையாக தோன்றினாலும், இந்த சவால் செய்வதில் அதிக ஆபத்து உள்ளதாக எச்சரிக்கின்றனர் கேரள போலீசார். இந்த சவாலை செய்ய வேண்டாம் என அவர்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக தங்களது பேஸ்புக் பக்கத்தில் அவர்கள் விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.
கவலை:
அதில், ‘சாலையில் செல்லும் வாகனத்தை , வழிமறித்து இந்த சவால் நடத்தப்படுகிறது. ஒருவேளை வழிமறிக்கப்படும் வாகனங்களின் பிரேக் அமைப்பு சரிவர இயங்கவில்லை என்றால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதோடு, வழிமறிக்கப்படும் போது ஓட்டுநரின் மனநிலை எவ்வாறு மாறும் என்பது சொல்ல முடியாது. வேடிக்கையாக தெரியும் சில செயல்களில் ஆபத்து இருப்பதை மக்கள் உணர வேண்டும். எல்லாவற்றையும் நகைச்சுவையாக அணுகிவிட முடியாது' என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications