கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு.. 3 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை! சுகாதாரத்துறை அலர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தெரிந்திருந்த நிலையில், அவரது ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயதான பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்துள்ளது. அதேபோல மலப்புரம் மாவட்டத்திலும் மற்றொருவருக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இருவரின் ரத்த மாதிரியும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து அப்பெண்ணின் வீட்டை சுற்றி 3 கி.மீ தொலைவுக்கு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தொற்றால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை கண்டறிய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 26 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "தொற்று பாதிப்பை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அதை அத்தனையையும் எடுத்திருக்கிறோம். தொற்று பாதிப்புகளுடன் நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறோம்.
பொது மக்களுக்கு உதவ ஹெல்ப் லைன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல சமீப நாட்களில் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications