ஆடைகளை களைந்து.. அந்த "கோலத்தில்".. துடிதுடித்த இளம்பெண்.. மொத்தம் 4 பேராம்.. மாமியார்தான் மெயின்
நிர்வாணமாக நிற்க வைக்க மருமகளை கட்டாயப்படுத்தி உள்ளனர் மாமியாரும், கணவரும்
திருவனந்தபுரம்: பல்வேறு கட்ட போராட்டங்களை கையில் எடுத்து, கணவனையும், மாமியாரையும் கைது செய்ய வைத்துள்ளார் ஒருஇளம்பெண்.. என்ன காரணம்?
கடவுளின் தேசம் என்று புகழப்பட்டு வரும் கேரளாவில் சமீபகாலமாகவே குற்றங்கள் பெருகி வருகின்றன.. பெண்கள் அதிக அளவு கல்வி கற்ற மாநிலமும்கூட.
ஆனால், இளம்பெண்கள் அதிலும் படித்த பெண்கள் வரதட்சணையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள்.. இன்னொரு பக்கம், நரபலி என்ற பெயரில் மூடபழக்கத்திற்கு ஆளாகி கிடக்கிறார்கள்.

குக்கர் + எலும்பு
மனிதர்களை கொன்று, உடல்பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் போட்டு வேகவைத்து, குழம்பு வைத்து சாப்பிடும் அளவுக்கு, அங்குள்ள சிலர் நம்மை உறைய வைத்துள்ளனர்.. இந்த கொடூரத்தில், பெண்களே ஈடுபட்டுள்ளது அதைவிட அதிர்ச்சியை தந்து வருகிறது.. பொதுவாக கேரளா என்றாலே, வருடா வருடம், வைரஸ் நோய்கள் மற்றும் இயற்கை சீற்றத்துக்கு ஆளாவது வழக்கமான ஒன்று.. காரணம், அதன் பூலோக அமைப்பு அந்த மாதிரியானது.. இதனால், இயற்கை சீற்றத்துக்கு ஏராளமானோர் உயிரிழந்து விடுகின்றனர்.

சைக்கோ
இதற்கு நடுவில் குற்றங்களும் பெருகி, அதன்மூலமும் அப்பாவி மனிதர்கள் உயிரிழப்பது ஜீரணிக்கவே முடியவில்லை.. அதிலும் பெண்கள் மீதான கொடுமைகள், வடமாநிலங்களை போலவே நம் தென்மாநிலங்களிலும் நடந்து வருவது வருத்தமளிக்கிறது.. இதோ இன்னொரு ஒரு கொடூர சம்பவம் கேரளாவில் நடந்து, வெலவெலக்க செய்து வருகிறது.. சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக மருமகளின் ஆடைகளை களைய செய்து, நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர் அவரது மாமியாரும், கணவரும்.

மந்திரவாதி
இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால்இதுதொடர்பாக இப்போதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... அந்த பெண் கொல்லத்தை சேர்ந்தவர்.. கணவர் பெயர் சத்யபாபு.. 36 வயதாகிறது.. கடந்த 2017ல் திருமணம் நடந்துள்ளது... திருமணம் முடிந்த 2 மாதத்தில் அவர்கள் வீட்டிற்கு சில மந்திரவாதிகள் வந்திருக்கின்றனர். வீட்டில் தீய சக்தி இருப்பதாக சொல்லி, மாமியாரும், கணவனும் சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக, அவர்களை வரவழைத்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணவருக்கும், மாமியாருக்கும் ஏதோ நோய் உள்ளதாம்.. அந்த நோய் குணமாக வேண்டும் என்றால் மருமகள் நிர்வாணமாக பூஜையில் உட்கார வேண்டுமாம்..

மாமியார்
மாந்திரீக வேலைகள் ஆரம்பமானது.. அதன் ஒரு பகுதியாகத்தான், இளம்பெண்ணின் கணவர் சத்யபாபுவும், மாமியாரும், அந்த பெண்ணின் ஆடைகளை களைய சொன்னார்கள்.. இதனால் பதறிப்போன அந்த பெண் மறுத்துள்ளார்.. ஆனால், வீட்டில் குடும்பத்தில் தோஷம் நீங்க வேண்டுமானால் நிர்வாணமாக நின்றாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர்.. அந்த பெண் எவ்வளவோ போராடி கெஞ்சி பார்த்தார்.. அந்த மாமியார் பெயர் லைஷா 60 வயதாகிறதாம்..

லைஷா + மருமகள்
ஒருகட்டத்தில், கணவருடன் சண்டை போட்டு கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார் அந்தபெண்.. நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, புகாரும் தந்துள்ளார்.. ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவே இல்லையாம்.. கணவனை உதறி தள்ளிவிட்டு, தன் அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார் அந்த பெண்.. கணவனை விவாகரத்து செய்யவும் நோட்டீசும் அனுப்பினார்.. மற்றொருபக்கம் புகார் கொடுத்தும் ஏன் நடவடிக்கை இல்லை என்று கேட்டு, அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே பலகட்ட போராட்டத்தை அந்த பெண் முன்னெடுத்துள்ளார்..

மெயின் லைஷா
மாந்திரீகம் தொடர்பான நரபலி சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வரவும், மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார் அந்த பெண்.. இதையடுத்து, 5 வருடம் கழித்து, இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. லைஷா கைதாகி விட்டார்.. ஆனால், அதற்குள் சத்யபாபு தலைமறைவாகி விடவும், அவரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. அந்த மந்திரவாதி அப்துல் ஜப்பார்தான் இது எல்லாவற்றிற்கும் காரணம் என்பதால், அவரை கைது செய்ய போலீசார் ரெடியாகி கொண்டிருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications