Onam bumper lottery: 30 கோடியை வாங்காம விடக்கூடாது.. கேரள லாட்டரி கடையை மொய்க்கும் சேட்டன்கள்! அனல் பறக்கும் ஓணம் பம்பர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒணம் பம்பர் லாட்டரி விற்பனை அனல் பறக்க நடைபெற்று கொண்டு இருக்கிறது. விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே 8 லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையான நிலையில் தொடர்ந்து விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பரிசு ரூ.30 கோடி என்பதால் கேரளாவில் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த பம்பர் டிக்கெட் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு வரை 25 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 5 கோடி உயர்த்தப்பட்டு முதல் பரிசு ரூ.30 கோடியாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி 20 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக 25 லட்சமும், 4 வது பரிசாக 5 லட்ச ரூபாய் 10 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது.

Onam bumper lottery Ticket sales skyrocket in Kerala shop people rush to buy for win 30 crore

போட்டி போட்டு வாங்கும் சேட்டன்கள்

பரிசுத்தொகை விழுந்தால் போதும், ஒரே நாளில் தலைவிதியே மாறிவிடும் என நம்பி பலரும் போட்டி போட்டுக்கொண்டு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருவதாக கேரள லாட்டரி வியாபாரிகள் கூறி வருகிறார்கள். வழக்கமாக தமிழக எல்லையோர மாவட்டமான பாலக்காடில்தான் டிக்கெட் சேல்ஸ் அதிகமாக நடக்கும். இந்த ஓணம் பம்பரிலும் அதேநிலைதான் நீடிப்பதாக லாட்டரி வியாபாரிகள் கூறும் கருத்தாக உள்ளது.

திருச்சூர், திருவனந்தபுரத்திலும் டிக்கெட் விற்பனை படு ஜோராக நடக்கிறதாம். கேரளாவில் தங்கியுள்ள வட மாநில புலம் பெயர் தொழிலாளிகளும் விரும்பி டிக்கெட்டை வாங்குகிறார்களாம். இதே நிலை நீடித்தால் அச்சிடப்பட்ட 90 லட்சம் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும் என்கிறார்கள் லாட்டரி விற்பனையாளர்கள். அதே நேரத்தில், கேரள லாட்டரிகளை பொறுத்தவரை தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

குலுக்கல் தேதி எப்போது?

லாட்டரிகளுக்கு ஒட்டு மொத்தமாக இங்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், தமிழ்நாட்டிற்கு லாட்டரி கொண்டு வருவது சட்ட விரோதம் என்பதால், பார்டர்களில் தீவிர சோதனையும் நடைபெற்று வருகிறது. கேரளாவில் இருந்து வரும் பயணிகளிடம் அவ்வப்போது திடீர் சோதனையிலும் தமிழக போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். குலுக்குக்கலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ளது.

அதாவது, செப்டம்பர் 26 ஆம் தேதிதான் குலுக்கல் நடைபெறுகிறது. இருந்தாலும் பரிசுத்தொகை அதிகம் என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் இடையே இந்த டிக்கெட்டுக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 30 கோடி முதல் பரிசுத்தொகை என்றாலும் வெற்றியாளருக்கு கையில் 63 சதவீதம் அளவுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். இதன்படி பார்த்தால் ரூ.18 முதல் 19 கோடி ரூபாய் மட்டுமே கையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏஜென்சி கமிஷனாக 12 சதவீதமும், வருமான வரியாக 30 சதவீதமும் பிடித்துக்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு யாருக்கு அடித்தது?

ஓணம் பம்பர் லாட்டரியில் கடந்த ஆண்டு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்பட்டது. முதல் பரிசு TH 577825 என்ற எண்ணுக்கு அடித்தது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள துராவூர் பகுதியை சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியரான சரத் நாயர் என்பவருக்கு 25 கோடி ரூபாய் பணமழை கொட்டியது. ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளை அடிக்கடி வாங்கும் பழக்கம் கொண்ட சரத் நாயர், பம்பர் டிக்கெட்டுகளை அதிகம் வாங்குவது இல்லை. ஆனால், கடந்த ஓணம் பம்பரை வாங்கியவருக்கு தலைவிதியே ஒரே நாளில் மாறிவிட்டது.

disclaimer: லாட்டரி வாங்குவதை துண்டும் நோக்கில் இந்த செய்தி தரப்படவில்லை. ஒரு தகவலகாக மட்டுமே தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் லாட்டரிக்கு முழு தடை உள்ளது. தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை சட்ட விரோதம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+