Onam Festival: நடனமாடிக் கொண்டிருந்த சட்டமன்ற ஊழியர்.. மயங்கி விழுந்து பரிதாபமாக பலி
திருவனந்தபுரம்: கேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் ஓணம் கொண்டாட்டத்தின்போது நடனமாடிக் கொண்டிருந்த சட்டமன்ற ஊழியர் ஒருவர் மேடையிலேயே மயங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மக்களின் பாரம்பரியப் பண்டிகையான ஓணம் கொண்டாட்டம் அம்மாநில மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம் என அனைத்துப் பகுதிகளிலும் அத்தப்பூ கோலமிட்டு, பாரம்பரிய உடைகள் அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். கேரளத்தில் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

முக்கியப் பண்டிகை செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கல்வி, வேலை, தொழில் நிமித்தமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள கேரள மக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கேரள மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகம் என ஒவ்வொரு பகுதிகளிலும் ஓணம் நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றன.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் ஓணம் கொண்டாட்டத்தின்போது நடனமாடிக் கொண்டிருந்த சட்டமன்ற ஊழியர் ஒருவர் மேடையிலேயே மயங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் சட்டமன்ற மண்டபத்தில் ஓணம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. துணை நூலகர் வி. ஜுனைஸ் (46) என்பவரும் தங்களது ஊழியர்களுடன், பாரம்பரிய உடை அணிந்து சிரித்த முகத்துடன் நடனமாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, மேடையிலேயே திடீரென அவர் மயங்கி விழுந்தார். அப்போது, அருகிலிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர். இதையடுத்து, சக ஊழியர்கள் அருகே சென்று பார்த்தபோது ஜுனைஸ் உயிரிழந்த சம்பவம் தெரியவந்துள்ளது. வயநாட்டின் பத்தேரியைச் சேர்ந்தவர் ஜுனைஸ். இவர் நடனமாடிக் கொண்டிருந்தபோது மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications