கேரளாவில் ஆன்லைன் விளையாட்டால் அதிர்ச்சி.. திருடனாகவே மாறிய போலீஸ்காரர்.. நண்பன் வீட்டில் கைவரிசை
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆன்லைன் விளையாட்டால் போலீஸ்காரர் ஒருவர் திருடனாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் அமல்தேவ் கே சதீசன் (35). இவர் எர்ணாகுளம் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் எர்ணாகுளம் வைபின் ஞாறக்கல் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரும் அமல்தேவும் நண்பர்களாவர். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி நடேசனின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை திருட்டு போயுள்ளது.

ஞாறக்கல் போலீஸ்
இதுகுறித்து நடராஜன் ஞாறக்கல் பகுதியில் உள்ள போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை. இந்த நிலையில் தனது வீட்டிற்கு அமல்தேவ் அடிக்கடி வந்து சென்றதால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக நடேசனின் மனைவி போலீஸில் புகார் அளித்தார்.

தீவிர விசாரணை
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அமல்தேவ், நடராஜனின் வீட்டில் 10 பவுன் நகையை திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஞாறக்கல் போலீஸார் அமல்தேவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

அமல்தேவ்
போலீஸ்காரராக பணியாற்றி வந்த அமல்தேவுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த விளையாட்டுக்கு அடிமையாகி போன அமல்தேவ் இதன் மூலம் 30 லட்சம் ரூபாயை இழந்துவிட்டாராம். மேலும் கடன் வாங்கி ரம்மி விளையாடியதால் கடன்காரர்கள் வட்டியையும் அசலையும் கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

கடன் வாங்கியது
கடன் வாங்கியது போதாது என தனக்கு கிடைக்கும் ஊதியத்தையும் அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலேயே செலவழித்துள்ளார். இந்த நிலையில் கடனை அடைக்க நண்பர் வீட்டில் திருட அமல் தேவ் முடிவு செய்தார். அதன்படி நடராஜனின் வீட்டுக்கு வழக்கம் போல் சென்ற அமல் தேவ் அங்கு யாரும் இல்லாத நேரத்தில் நகைகளை திருடியுள்ளார்.

திருடிய நகைகள்
திருடிய நகைகளை அந்த பகுதியில் ஒரு அடகு கடையில் அடகு வைத்து பணம் பெற்றார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். ஆன்லைன் விளையாட்டால் பல மாநிலங்களில் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை உள்ளது. ஆன்லைன் ரம்மியால் கடன் தொல்லை தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டு விடுகிறார்கள்.
-
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications