“கோழைத்தனமான செயல்..” மோகன்லால் உள்ளிட்ட கேரள திரைப்பட சங்க நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்த பார்வதி
திருவனந்தபுரம்: கேரளாவில் சினிமா நடிகைகள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று, நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை கூறியிருந்தது பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. இப்படி இருக்கையில், மலையாள திரைப்பட சங்கத்தின் தலைவர் மோகன்லால் உட்பட பலர் பதவி விலகியிருந்தனர். இது கோழைத்தனமான செயல் என்று நடிகை பார்வதி விமர்சித்திருக்கிறார்.
மலையாள சினிமாக்கள் சமீப காலமாக தேசிய அளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது. ஆனால் இந்த சினிமா துறையில், நடிகைகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இதனை அறிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு தயார் செய்தது.

ஆனால், இந்த அறிக்கை வெளியானால் எங்கு தங்களுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று பயந்து, திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், சமீபத்தில் நீதிமன்றம் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியானது.
இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது. கேரள மாநில அரசே இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தீவிர நடவடிக்கையை எடுக்க களத்தில் இறங்கியுள்ளது.
இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தது, மலையாள சினிமா உலகில் பெரும் பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது.
அதாவது நடிகரும், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளருமான சித்திக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். அதேபோல மற்றொரு நடிகர் ரியாஸ் கானும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார்.
மறுபுறும் பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, கலாச்சித்ரா அகாதெமியின் தலைவரும், பிரபல மலையாள சினிமா இயக்குநருமான ரஞ்சித் மீது பாலியல் புகாரை எழுப்பினார். இதனை தொடர்ந்து ரஞ்சித்தும் ராஜினாமா செய்தார். இப்படி பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது, நடிகைகள் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர்.
இது மோகன்லாலுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது மோகன்லால் மலையாள நடிகர்கள் சங்க தலைவராக இருந்தார். இதன் பொதுச் செயலாளர் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது இவருக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் நடிகர்களை இவர் காப்பாற்றுகிறாரா? அப்படி தெரியவில்லையெனில், சக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் கூட தெரியாமல் எதற்காக சங்க தலைவராக இருக்கிறார்? என்று கேள்வி எழுந்தது. இதனையடுத்து மோகன்லால் உட்பட 17 முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், இவர்களின் நடவடிக்கை கோழைத்தனமானது என்று நடிகை பார்வதி விமர்சித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது, “இந்த கூட்டு ராஜினாமா பற்றி கேள்விப்பட்டவுடன், இது எவ்வளவு கோழைத்தனமான செயல்? என்றுதான் எனக்கு தோன்றியது. ஊடகங்களிடம் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பான இடத்தில் இருந்துக்கொண்டு, அங்கிருந்து விலகிச் செல்வது எவ்வளவு கோழைத்தனமானது?
இப்படி நடப்பது முதல் முறையல்ல. கடந்த 2017ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை இதே செயற்குழுதான் வரவேற்றிருந்தது. இந்த ராஜினாமா மூலம் இந்த பிரச்னை குறித்த விஷயங்களை வெளியில் கொண்டு வரும் அனைத்து பொறுப்புகளும் மீண்டும் பெண்களிடமே சுமத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications