ஓடும் ரயிலுக்குள் படமெடுத்த "பாம்பு.." ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்! மதுரை ரயிலில் ஷாக்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் புகுந்த பாம்பு ஒன்று பயணியை கடித்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்த அந்த பயணி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரளாவில் உள்ள குருவாயூரில் இருந்து மதுரைக்கு மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் குருவாயூரில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும். இந்த ரயிலில் இரு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் அதிகம் பயணிப்பதை காண முடியும்.

வினோத சம்பவம்: கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கும் தொழில் நிமித்தமகவும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக செல்லும் பயணிகள் பலரும் இந்த ரயிலில் அடிக்கடி பயணம் செய்வார்கள்.. வழக்கம் போல இந்த ரயில் இன்று அதிகாலை குருவாயூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரயில் கோட்டயம் அருகே உள்ள எட்டுமனூர் அருகே வந்த போது, ரயிலுக்குள் வினோத சம்பவம் நடைபெற்றது.
தென்காசி இளைஞர்: அதாவது, ஓடும் ரயிலுக்குள் புகுந்த பாம்பு ஒன்று ரயிலில் பயணம் செய்த 21 வயது கார்த்திக் என்ற இளைஞரை கடித்தது. தென்காசியை சேர்ந்த கார்த்திக் பிரவோம் ரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியிருக்கிறார். தனது சொந்த ஊரான தென்காசிக்கு செல்வதற்காக கார்த்திக் ரயிலில் ஏறியுள்ளார்.
பாம்பு கடித்தது: இந்த ரயில் காலை 10 மணியளவில் கோட்டயம் அருகே வந்த போது, தன்னை ஏதோ கடிப்பது போல உணர்ந்து இருக்கிறார். இதையடுத்து வலியால் அலறி துடித்த கார்த்திக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெட்டியை பூட்டி சீல் வைத்தனர்: இருக்கைக்கு அடியில் பாம்பைக் கண்டதாக சக பயணிகளும் கூறினர். இதையடுத்து எட்டுமனூர் ரயில் நிலையத்தில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயிலில் பாம்பு புகுந்ததாக சொல்லப்படும் ஆறாவது பெட்டியை ரயில்வே அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ரயில் நிறுத்தப்பட்டு இருக்கும் போதும் புதர் பகுதிகளில் இருந்து ஊர்ந்து வந்த பாம்பு பெட்டிக்குள் ஏறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஓடும் ரயிலுக்குள் புகுந்த பாம்பு பயணியை கடித்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications