திக்கெட்டும் பரவும் புகழ்... கேரள மாநிலம் கன்னூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியார்..!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கன்னூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியாரின் சமூக தொண்டு குறித்து சேர்க்கப்பட்டுள்ளது.
பெண்ணுரிமைக்காகவும், சாதி பேதமில்லா சமத்துவ சமுதாயத்துக்காவும் தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை உழைத்தவர் பெரியார். முற்போக்கான கருத்துக்கள் மூலம் பகுத்தறிவை வளர்த்தெடுத்தார்.

மூடப்பழக்க வழக்கங்களை வாழ்நாள் முழுவதும் எதிர்த்த இவர், சுயமரியாதையை போதித்து வந்தார். குழந்தை திருமணம் எதிர்ப்பு, விதவை மறுமணம், பெண்களுக்கு கல்வி, என பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஓயாது குரல் கொடுத்து வந்தார் பெரியார்.
இதனிடையே கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் உள்ள தெருக்களில் பட்டியலின பிரிவை சேர்ந்தவர்கள் நடக்க கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த சமூக நல ஆர்வலர்களின் அழைப்பை ஏற்று போராட புறப்பட்டுச் சென்றார் பெரியார். மேலும், வைக்கத்தில் போராட்டம் நடத்தி கைதானார்.
தமிழகம் கடந்து இன்று உலகம் முழுவதும் பெரியாரின் கொள்கைகள் மற்றும் சிந்தனைகள் பரவியுள்ளன. அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில், கன்னூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியார் சேர்க்கப்பட்டுள்ளார். இது பெரியார் கொள்கை பின்பற்றாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
முதுகலை படிப்பில், அதாவது எம்.ஏ. ( அரசியல் மற்றும் நிர்வாகம் ) பிரிவில் பெரியார் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. இதனிடையே சங்பரிவார், தீனதயாள் உபாத்யாயா, பல்ராஜ் மதோக் போன்றோர் தொடர்புடைய விவகாரங்களை பல்கலைக்கழக கல்வித்திட்டக் குழு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து அதிலிருந்து நீக்கியிருக்கிறது.
அதே சமயத்தில் கோல்வால்கர், வீர சாவர்கர், முகமது அலி ஜின்னா, மவுலானா அபுல் கலாம் ஆசாத், போன்ற தலைவர்கள் குறித்த விவரங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் குறித்த வரலாறுகளும் எம்.ஏ. அரசியல் மற்றும் நிர்வாகம் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனிடையே திராவிட நாடு என்ற தலைப்பில் தந்தை பெரியாரை பற்றிய பாடம் இணைக்கப்பட்டுள்ளது. வசதியான குடும்பத்தில் பிறந்து சமூக தொண்டுக்காக சுகபோக வாழ்க்கையை துறந்து மக்களுக்கு பெரியார் ஆற்றிய அனைத்து பணிகளும் இந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications