நாளை திருவனந்தபுரம்- காசர்கோடு வரை வந்தே பாரத் ரயில் தொடக்கம்! இன்று கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு இரு நாட்கள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வந்துள்ளார். அவருக்கு கொலை மிரட்டல் எதிரொலியால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாகப் பிரதமர் மோடி வந்தார். அவர் இன்று மாலை மத்தியப் பிரதேசத்திலிருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கிருந்து 1.8 கி.மீ. தொலைவுக்கு அவர் சாலை பிரச்சாரத்தில் அவர் தொண்டர்களைச் சந்திக்கிறார்.
இதையடுத்து பாஜக இளைஞர் பாசறை சார்பில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் கிறிஸ்துவ மத தலைவர்களை சந்தித்தும் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு கொச்சியில் உள்ள தாஜ் மலபார் ஹோட்டலில் தங்குகிறார்.

நாளை செவ்வாய்க்கிழமை காலையில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். கேரளாவில் முதல்முறையாக திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் அதுவும் சென்னை பெரம்பூர் லோகோ பேக்கடரியில் தயாரிக்கப்படுகிறது. இது மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்ல கூடியது.
பிரதமர் மோடி பயணத்தின் போது தற்கொலை படை தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல் கடிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா பாஜக அலுவலகத்திற்கு வந்தது. மேலும் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய 49 பக்கமும் சமூகவலைதளங்களில் கசிந்த சம்பவமும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மற்றும் அவருடைய பாதுகாப்பு விவரங்கள் கசிந்ததை அடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே மோடி நிகழ்ச்சி நடைபெறும் கொச்சியில் 2 ஆயிரம் போலீஸாரும் திருவனந்தபுரத்தில் 2 ஆயிரம் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் நிகழ்ச்சி நடக்கும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம், சென்ட்ரல் ஸ்டேடியம் உள்ளிட்டவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. வந்தே பாரத் சேவை தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் ரயில்கள் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகை தராது. இந்த ரயில்கள் கொச்சுவேலி, நெய்யாற்றின்கரை, நேமம், கழக்கூட்டம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications