கேரளா குண்டுவெடிப்பு! அவசர உத்தரவை பிறப்பித்த தமிழ்நாடு டிஜிபி! தென் தமிழ்நாட்டில் களமிறங்கிய போலீஸ்
திருவனந்தபுரம்: கேரள குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.

Jehovah's Witnesses என்ற கிறிஸ்துவ பிரிவை சேர்ந்தவர்கள் நடத்திய ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நடத்த இடத்தில் 2000 பேர் வரை கூடி இருந்தனர். வெடிகுண்டு படை, தடயவியல் குழு மற்றும் என்ஐஏ குழு ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. அதே நேரத்தில் கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கேரளா டிஜிபி ஷேக் தர்வேஷ் அளித்த பேட்டியில், கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என்பது உறுதி ஆகி உள்ளது. 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்தது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை செய்து வருகிறது. இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாதுகாப்பு: கேரள குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீல நிற கார் புறப்பட்டு சென்றதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான நீல நிற காரை போலீசார் தேடி வருகின்றனர். நீல நிற காரில் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எர்ணாகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் தேடுதல் பணி தீவிரம் அடைந்து வருகிறது.
குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ்தவப் பிரிவினர் அமைப்பு: Jehovah's Witnesses அல்லது யெகோவாவின் சாட்சிகள் ஒரு கிறிஸ்தவப் பிரிவினர் அமைப்பு ஆகும். ஆனால் இவர்கள் பரிசுத்த திரித்துவத்தில் (தந்தை, குமாரன் (இயேசு கிறிஸ்து) மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று சம நபர்களில் நம்பிக்கையற்றவர்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை "பரலோகத்தில் உள்ள கடவுளின் ராஜ்யத்தின் ராஜா" என்று நம்புகிறார்கள், ஆனால் இயேசுவை சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் பைபிளின் உரையை மட்டுமே முழுமையாக நம்ப கூடியவர்கள். Jehovah's Witnesses பிரிவை சேர்ந்தவர் கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர் கொண்டாடுவதில்லை, ஏனென்றால் இதுபோன்ற பண்டிகைகளை அவர்கள் நம்புவதில்லை. இவர்களின் நிகழ்வில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications