‛கண்வைத்த சிபிஐ’.. வயநாடு தொகுதியை இழக்கும் ராகுல் காந்தி? கூட்டணியால் காங்கிரசுக்கு புது பிரச்சனை
திருவனந்தபுரம்: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த தொகுதியில் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்க முடிவு செய்துள்ள நிலையில் ராகுல் காந்திக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி உள்ளது. இதற்கான தேதியை அடுத்த மாதம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் என்பது ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளன.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவின் வெற்றி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 27 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி தோற்றுப்போனார். அந்த தொகுதியில் மத்திய அமைச்சரான பாஜகவின் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியை வீழ்த்தினார்.
மாறாக ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ராகுல் காந்தி 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றார். தற்போது அவர் வயநாடு எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் வரும் தேர்தலிலும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு பிரசாரம் செய்யாமல் இருந்தாலும் கூட அவர் எளிதாக வெற்றி பெறுவார். இதன்மூலம் அவர் நாடாளுமன்ற தேர்தலில் பிற மாநிலங்களிலும் பிரசாரத்தில் கவனம் செலுத்தலாம் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது.
ஆனால் தற்போது ராகுல் காந்திக்கு புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. அதாவது கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அங்கு கட்டமைப்பு உள்ளது. இந்த கட்சிகளுடன் தற்போது காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளது. அதில் ஒரு தொகுதியாக வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்க விரும்புகிறதாம். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் வயநாடு தொகுதியை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி விட்டு கொடுக்கும் சூழல் வரும் நாட்களில் உருவாகலாம் என கூறப்படுகிறது.
ஏனென்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தியாவில் பிற மாநிலங்களில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. ஆனால் கேரளாவில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. குறிப்பாக வயநாடு தொகுதியை எடுத்து கொண்டால் கடந்த 2009, 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியின் வேட்பாளர் 2ம் இடம் பிடித்தார். இதனால் வயநாடு தொகுதியை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கேட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மகிளா சமாக்கிய பொதுச் செயலாளரும், டி.ராஜாவின் மனைவியுமான அன்னி ராஜாவை போட்டியிட வைக்கும் முனைப்பில் அந்த கட்சி செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் குழுவினர் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் ராகுல் காந்தி தான் வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறது. ஏனென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு ‛சேப்' தொகுதியாக இது இருக்கும் என காங்கிரஸ் நினைக்கிறது. ஒருவேளை வயநாடு தொகுதியை காங்கிரஸ் கட்சி விட்டு கொடுக்கும் சூழல் வந்தால் ராகுல் காந்தி வேறு தொகுதியில் போட்டியிட வேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்திக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications