எது எப்படியோ... கேராளவில் பாஜகவுக்கு இடமில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது -ரமேஷ் சென்னிதாலா
திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவுக்கு இடமில்லை என்பது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக்கியுள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஐக்கிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான எம்.எம்.ஹசன், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூறிய முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் யு.டி.எஃப்.க்கு எதிரான நிலைப்பாட்டை காட்டவில்லை என்றும் மாநகராட்சி உட்பட பல இடங்களில் நல்ல வெற்றியை பெற்றிருப்பதாகவும் கூறினார். மேலும், தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையாக ஆராயப்பட்டு தேவையெனில் செயல்பாடுகளில் சில மாற்றங்களை கொண்டு வருவோம் எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, எது எப்படியோ கேரளாவில் பாஜகவுக்கு இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படக் கூறியுள்ளார்கள் என்றும் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு நல்ல பாடத்தை புகட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல் தேர்தல் முடிவு குறித்து கருத்துக் கூறியுள்ள ஐ.யூ.எம்.எல். முக்கியத் தலைவரும், எம்.பியுமான பி.கே. குன்ஹாலி குட்டி, UDF கூட்டணியில் வாக்குவங்கிக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்றும் ஆனால் அதேவேளையில் தெற்கு கேரளா மற்றும் மத்திய கேரளாவில் UDF கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து அவசியம் ஆராய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து நாளை விரிவாக ஆலோசித்து ஆராயப்படும் எனக் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications