Summer Bumper: தமிழருக்கு அடித்ததா ரூ.10 கோடி.. கேரளா சம்மர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு வென்றது யார்?
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.10 கோடி பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. பாலக்காடு தமிழக எல்லையோர மாவட்டம் என்பதால், தமிழகத்தில் இருந்து வந்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு யாருக்கேனும் அடித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பரிசு தமிழகத்தை சேர்ந்த யாருக்கேனும் விழுந்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கேரள சேட்டன்களுக்கு ஏற்படுள்ளது.
கேரளா லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நேற்று (28) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மொத்தம் 42 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அனைத்து டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட்டன. அதாவது 41 லட்சத்திற்கும் மேல் விற்றுள்ளன.

ரூ.10 கோடி முதல் பரிசு
அனல் பறக்கும் தேர்தல் களம், வெயிலுக்கு நடுவே டிக்கெட் விற்பனையும் இந்த முறை சூடுபறந்துள்ளது. முதல் பரிசு ரூ.10 கோடி என்பதால் இந்த டிக்கெட் வாங்க கேரள லாட்டரி பிரியர்களுக்கு பெரும் ஆர்வம் ஏற்பட்டது. முதல் பரிசு விழுந்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் எனக்கருதி பெரும் ஆர்வத்துடன் லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுகளை வாங்கினார்.
லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த முதல் பரிசு SB 517026 (PALAKKAD) என்ற எண்ணிற்கு அடித்தது. பாலக்காட்டில் உள்ள மதுசூதனன் என்ற ஏஜென்சி விற்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. அதிர்ஷடசாலி யாரென்ற விவரம் இன்னும் தெரியவில்லை. பாலக்காட்டை பொறுத்தவரை தமிழகத்தின் எல்லையோர கேரள மாவட்டமாகும்.
தமிழருக்கு முதல் பரிசு அடித்ததா?
பாலக்காடு தினமும் ஆயிரக்கணக்கான தமிழகர்கள் பல்வேறு காரனங்களுக்காக சென்று வருகிறார்கள். மருத்துவம், கல்வி, தொழில் காரணங்களுக்காக பலரும் சென்று வரும் நிலையில், ஒரு சில லாட்டரி பிரியர்கள் கேரளா செல்லும் போது லாட்டரிகளை வாங்குகிறார்கள். அவர்களில் சிலருக்கு பரிசும் அடிப்பதையும் பார்க்க முடிகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஓணம் பம்பரில் முதல் பரிசு திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு அடித்து இருந்தது. அவ்வப்போது வெளி மாநிலத்தவர்களுக்கும் முதல் பரிசு அடிப்பதால், சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசு தமிழகத்தை சேர்ந்த யாருக்கேனும் விழுந்து இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கேரள சேட்டன்களுக்கு ஏற்படுள்ளது. முதல் பரிசு வென்று கோடிகளை குவிக்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என்ற ஆவலுடன் கேரள லாட்டரி பிரியர்கள் காத்திருக்கிறார்கள்.
கைக்கு எவ்வளவு கிடைக்கும்?
தற்போது வரை அதிர்ஷ்டசாலி தெரியாத நிலையில், இன்று விடுமுறை நாள் எனபதால் வரும் நாட்களில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பரிசு ரூ.10 கோடி என்றாலும் 30 சதவீதம் வரி மற்றும் கமிஷன் பிடித்தம் உள்ளிட்டவைகள் போக சுமார் ரூ.6.3 கோடியே பரிசாக கிடைக்கும்.
முதல் பரிசு வென்றவர்கள் 30 நாட்களுக்குள் அசல் டிக்கெட்டை சமர்பித்து பரிசுத்தொகையை உரிமை கோரலாம். அதிகபட்சம் 90 நாட்களுக்குள், தாமதத்திற்கான உரிய காரணங்களுடன் டிக்கெட்டை சமர்பிக்கலாம். அதன்பிறகு சமர்பித்து பரிசுத்தொகை உரிமை கோர முடியாது. கள்ளச்சந்தையில் வாங்கப்பட்ட டிக்கெட் என்றாலும் பரிசுத்தொகை வழங்கப்படாது.
எப்படி பரிசு வாங்க வேண்டும்?
வெளி மாநிலத்தவராக இருந்தால் அவர்கள் கேரளாவில் டிக்கெட் வாங்கியதற்கான ஆதாரங்களை சமர்பித்து பரிசுத்தொகையை உரிமை கோரலாம். சம்மர் பம்பரில் இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. SE 660573என்ற டிக்கெட்டிற்கு இரண்டாவது பரிசு விழுந்தது. இந்த டிக்கெட்டும் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூரில் (CHITTUR) விற்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது பரிசு என இரண்டுமே பாலக்காடு மாவட்டத்திலேயே விழுந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications