தங்க ஐயப்பன் டாலர்.. சபரிமலையில் மீண்டும் விற்பனை! விலை என்ன? எப்படி வாங்கலாம்? முழு விபரம்
சபரிமலை: பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மீண்டும் தங்கத்தால் செய்யப்பட்ட ஐயப்பன் சாமி டாலர் விற்பனை தொடங்கி உள்ளளது. இந்த தங்க ஐயப்பன் டாலரின் விலை என்ன? பக்தர்கள் அதனை எப்படி ஆன்லைனில் வாங்கலாம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளிலும் சபரிமலை கோவிலில் சிறப்பு பூஜை நடக்கும். அன்றைய தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த சபரிமலை கோவில் என்பது திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தான் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படும் என்று தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில்(கேரளாவில் விஷூ பண்டிகை) கோவில் சன்னிதானத்தில் ஐயப்பன் உருவத்துடன் கூடிய தங்க டாலர் விற்பனை தொடங்கியது.
சன்னிதானத்தின் கொடிமரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவசம், கூட்டுறவு மற்றும் துறைமுக அமைச்சர் வி.என்.வாசவன் கலந்துகொண்டு ஐயப்பன் தங்க டாலர் விற்பனையை தொடங்கி வைத்தார். ஆந்திராவைச் சேர்ந்த மணிரத்னம் என்ற பக்தர் முதல் முதலாக தங்க ஐயப்பன் டாலரை பெற்று கொண்டார். தந்திரி கண்டரரு ராஜீவரு, தேவசம்போர்டு தலைவர் பிஎஸ்.பிரசாந்த், உறுப்பினர் ஏ.அஜிகுமார், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் 2 நாட்களில் 100 பக்தர்கள் ஐயப்பன் தங்க டாலரை பெற்று கொண்டுள்ளனர். மொத்தம் 3 வகையான ஐயப்பன் தங்க டாலர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2 கிராம் எடைகொண்ட ஐயப்பன் டாலர் ரூ.19,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 கிராம் எடை கொண்ட ஐயப்பன் டாலர் ரூ.38,600க்கும், 8 கிராம் எடை கொண்ட ஐயப்பன் தங்க டாலர் ரூ.77,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தங்க டாலரின் விலை என்பது மார்க்கெட் மதிப்பை பொறுத்து அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து 916 முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு டாலருமே சன்னிதானத்தில் வைத்து பூஜை செய்த பிறகே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஐயப்பன் தங்க டாலரை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கி கொள்ளலாம். இந்த டாலரை விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வாங்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications