சபரிமலையில் மகர ஜோதி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் நடைபெற்ற மகர ஜோதி, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலையில் நடைபெற்ற மகர ஜோதி, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயலில் இன்று மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடந்தது. இதனையொட்டி, சபரிமலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30ம் தேதி திறக்கப்பட்டது.

Sabarimala Makaravilakku: Thousands of devotees participated in the festival

தினமும் கோவிலில் இதற்காக பூஜை நடைபெற்றது. தினமும் பல்லாயிரக்கணக்கில் இருமுடி சுமந்து வந்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை செய்தனர்.

விழாவின் மக்கள் அதிகம் எதிர்பார்த்த மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் மாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு மாலையில் இருந்து பூஜைகள் நடந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையிலும், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி முன்னிலையிலும் நடந்தது. பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது. ஐயப்ப பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.

பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பத்தர்கள் ஐயப்ப கோஷம் எழுப்பி ஜோதியை வழிபட்டனர். மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருந்தனர்.

இந்த விழா மிகவும் சிறப்பாக நடந்தது. பாதுகாப்பிற்காக அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+