சபரிமலை மண்டல பூஜை காலம்: எத்தனை கோடி வருமானம் கிடைத்துள்ளது தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக் காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளதாகவும், 297 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலைக்கு வந்து ஐயப்பனை மனமுருகி தரிசனம் செய்து செல்கின்றனர்.

சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் சபரிமலை மண்டல பூஜை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது.
மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
கடந்த ஆண்டு சபரிமலை சீசனின்போது பக்தர்கள் காடுகள், சாலைகள், சபரிமலை பாதை என ஒவ்வொரு பகுதியிலும் 24 முதல் 36 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இச்சம்பவத்துகக்கு பல்வேறு மாநில அரசுகளும் கண்டனம் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் இந்த ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டன.
18 ஆம் படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றும் பணிக்கு காவலர்கள் அமர்த்தப்பட்டனர். இதற்காக பயிற்சி பெற்ற சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதைத் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களிடமிருந்து இதுவரை எந்தவொரு புகாரும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளதாவது: மண்டல காலமான கடந்த 41 நாள்களில் சுமாா் 32.49 லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனா். 297 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருமானம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் 82.23 கோடி ரூபாய் கூடுதலாகும். அரவண பாயசம் பிரசாதத்தின் மூலமாக 124 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலமாக 80.25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த தொகை கடந்த ஆண்டை விட ரூ. 13.24 கோடி அதிகமாகும். தண்ணீர் மூலம் பரவும் தொற்றுநோயை தடுக்கும் வகையில் ஐயப்ப பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
மகரவிளக்கு பூஜை வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. பூஜைகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் வகையில், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளோடு தேவசம்போர்டு சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications