ஐயப்பனை காண திரண்ட பக்தர்கள்..திணறுது சன்னிதானம்! சத்திரம் வழி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் செய்தி!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. தற்போது சபரிமலை சன்னிதானத்தில் நெரிசல் அதிகரித்துள்ளதால் சத்திரம் வனப் பாதையை கடந்து செல்வதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிமேலியில் பேட்டை துள்ளி காட்டுப் பாதை வழியாக பெருவழிப்பாதையிலும், பம்பையில் குளித்து விட்டு சன்னிதானம் செல்லும் சிறு வழிப் பாதை வழியாகவும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மகரஜோதி தரிசனம்:
கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை காண அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள். ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜோதி தரிசனத்துக்காக சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவது வழக்கம்.
சபரிமலை:
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பக்தர்கள் வருகையால் சன்னிதானம் திணறி வரும் நிலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பக்தர்கள் குழுவாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சத்திரம், புல் மேடு, எரிமேலி, அழுத கடவு, வனப்பாதை வழியாக செல்கின்றனர்.
சபரிமலையில் நெரிசல்:
தற்போது சபரிமலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப இங்கு பக்தர்கள் அனுமதிக்கும் நேரம் ஆனது மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சீசன் நிறைவடைய இருக்கும் நிலையில் சபரிமலை சன்னிதானத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்துள்ளது. இதனால் அப்பாச்சி மேடு பகுதியில் இருந்தே சன்னிதானம் வரை கடும் நெரிசல் இருக்கிறது. சுமார் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
சத்திரம் பாதை:
இந்த நிலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகள் சத்திரம் வனப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்றனர். அதன் அடிப்படையில் இன்று முதல் நேரக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
நேரம் மாற்றம்:
அதன்படி, காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். முன்பு இரண்டு மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டு மணி நேரம் பக்தர்கள் அனுமதி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அழுதகடவு, முக்குழி வனப் பாதையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் அந்த நேரத்தில் என்ற மாற்றமும் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications