நெய் மணக்குது நெய் இருக்குது சபரிமலையிலே! ஒளிரபோகும் மகரவிளக்கு! ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் தரிசனம்
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சனிக்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடை சாத்தப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்நிலையில், மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், இருமுடி கட்டி சன்னிதானம் வந்த ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தால் சபரிமலையே நிரம்பியது. சரண கோஷத்துடன் 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு கூறியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை கடந்த சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது.
முன்னதாக மண்டல பூஜைக்காக பயன்படுத்தப்படும் தங்க அங்கி பந்தனம் திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் இருந்து புறப்பட்டது. 23ஆம் தேதி தொடங்கிய தங்க அங்கி ஊர்வலம் பம்பை வழியாக சன்னிதானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தங்க அங்கி அணிந்து அருள் பாலித்த ஐயப்பனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் ஐயப்பன் கோவில்
தொடர்ந்து சனிக்கிழமை காலை 10.10 மணிக்கு தொடங்கிய மண்டல பூஜை 11:30 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு மண்டல கால வழிபாடுகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கோவில் சன்னிதானத்தை சுத்தம் செய்வதற்காக 28 மற்றும் 29ஆம் தேதிகளில் சன்னிதானம் நடை சாத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், சபரிமலையில் மகரஜோதி தரிசனம் வரும் ஜனவரிமாதம் 14ஆம் தேதி நடக்கிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது.
சபரிமலை மகர விளக்கு
தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்பட்டு ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை நெய்யாபிஷேகம் நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 256 பக்தர்கள் சன்னிதானம் வந்தனர். 30-ம் தேதி 57 ஆயிரத்து 256 பேர் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 5:00 மணி வரை 63 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை பக்தர்கள்
மகர விளக்கு கால நெய்யபிஷேகம் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு தொடங்கிய நிலையில், முன்னதாக. 3:00 மணிக்கு நடை திறந்து அபிஷேகம் நடத்திய பின்னர் தந்திரி மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கியது.நேற்று மதியம் மகர விளக்குகால முதல் களபாபிஷேகம் நடந்தது. மகர விளக்கு காலத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக தனி அதிகாரியாக எஸ்.பி., எம்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளா நிலையி, 10 டிஎஸ்பிகள், 35 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் உட்பட 1593 போலீசார் சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகரஜோதி தரிசனம்
வரும் ஜனவரி 14ஆம் தேதி, மகரஜோதி தரிசனம் நடக்கிறது. அன்று மாலை தீபாராதனைக்கு பின்னர் பொன்னம்பலமேட்டில் மகரஜோதியும் மகர நட்சத்திரமும் தெரியும். முன்னதாக புல்மேடு சம்பவம் எதிரொலியாக மகர ஜோதி நாளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் எனவும், மகர விளக்கு பூஜைக்கு முந்தைய நாளான ஜனவரி 13ஆம் தேதி 35 ஆயிரம் பக்தர்களுக்கும் மகர விளக்கு பூஜை நடைபெறும். ஜனவரி 14-ஆம் தேதி 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications