சபரிமலை திணறுது..உண்டியல் நிரம்புது! 15 நாட்களில் வருமானம் இவ்வளவா? பக்தர்களுக்கு இனி பாயாசம்
திருவனந்தபுரம்: உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் நடந்து வரும் நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 12.40 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். இது கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கோவிலுக்கான வருவாயும் 33 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 15 நாட்களில் மட்டும் வருவாய் 92 கோடி கடந்து இருப்பதாக சொல்கின்றனர் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி விரதமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு திரண்டு வருகின்றனர்.
இதுவரை இல்லாத வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நிலையில் முன்பதிவு செய்யாமல் ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

சபரிமலை ஐயப்பன் கோவில்
இதனையடுத்து ஸ்பாட் புக்கிங் உள்ளிட்டவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நிலைமை ஓரளவு சீரடைந்தது. சில நாட்களைத் தவிர்த்து, பிற தினங்களில் தொடர்ந்து அதிகளவிலான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கூட்டநெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதனால் நீண்ட வரிசையிலும், காத்திருப்பு நேரத்திலும் நேரக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மண்டல பூஜை
இந்நிலையில் கூட்டத்துக்கு ஏற்ப கோவிலுக்கு வருவாயும் கணிசமாக அதிகரித்துள்ளது. சபரிமலையில் மண்டலகாலம் துவங்கிய 15 நாட்களில் சபரிமலை தேவஸ்வம் போர்டுக்கு கிடைத்த மொத்த வருமானம் ரூ.92 கோடியை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 33 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும். கடந்த ஆண்டு இதே 15 நாட்களில் ரூ.69 கோடி மட்டுமே வருவாயகக் கிடைத்திருந்தது. குறிப்பாக அரவணை விற்பனையில் இந்த ஆண்டு மிகப் பெரிய சாதனை நடந்துள்ளடுஹ். கடந்தாண்டு ரூ.32 கோடியாக இருந்த அரவணை வருமானம் இந்தாண்டு ரூ.47 கோடியாக உயர்ந்துள்ளது. இது 46 சதவீத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
வருவாய் உயர்வு
அப்பம் விற்பனை ரூ.3.5 கோடி வருமானத்தை பெற்றுள்ளது. இது மட்டும் கடந்த ஆண்டும் இதே அளவில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக மட்டும் ரூ.26 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு கிடைத்த ரூ.22 கோடி உடன் ஒப்பிடும்போது, இது 18 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 15 நாட்களில் 12.47 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு நேரடியாக வந்து தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட ஒரு லட்சம் பேர் கூடுதல்.
அரவணை விற்பனை
மண்டலகாலம் ஆரம்பிக்கும் முன் தேவஸ்வம் போர்டு 46 லட்சம் டின் அரவணையை ஸ்டாக் செய்திருந்தது. தற்போது அது 27 லட்சமாக குறைந்துள்ளது. இதனால், கூட்டம் அதிகமில்லாத இந்த காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் அரவணை வாங்க முடிந்ததாக அதிகாரிகள் விளக்குகின்றனர். பொதுவாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில், பக்தர்கள் அரவணை வாங்காமல் திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை சீராக உள்ளதால் விற்பனை கூடுதல் அளவில் நடைபெற்று வருகிறது.
பாயாசம் வழங்கல்
தற்போது தினமும் இரண்டரை லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையான அளவு பக்தர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய உற்பத்தியை மூன்று லட்சம் டின்களாக உயர்த்துவதற்கான ஆலோசனையும் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள தேவஸ்வம் போர்டு கூட்டத்தில் அன்னதானத்தில் மதிய நேரத்தில் பாயாசம் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதும் கவனிக்கத்தக்கது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications