Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலை காடு தேடி.. சன்னிதானத்தில் கூட்டம் சும்மா அள்ளுது! பெருவழிப் பாதை பக்தர்களுக்கு ஷாக் செய்தி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து தற்போது மகர விளக்கு பூஜை காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சன்னிதானத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் நிலையில் பெருவழிப்பாதை பக்தர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் தேவஸ்தான அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.

spirituality sabarimala mandala pooja

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.

சபரிமலை பூஜை:

தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யாபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.

சிறப்பு பூஜை:

தொடர்ந்து அன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நெய், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு நடை சாற்றப்பட்டு பின்னர் மூன்று மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

பக்தர்கள் தரிசனம்:

பின்னர் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில் பின்னர் ஹரிவராசனம் இசைக்கப்பட்டு ஐயன் ஐயப்பன் துயில் செல்கிறார். இந்த நிலையில் நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி ஏந்தி பம்பை வழியாகவும், புல்மேடு, எரிமேலி வழியாகவும் தரிசனத்துக்கு வருகின்றனர்.

கூட்டம் அதிகரிப்பு:

குறிப்பாக எருமேலியில் பேட்டை துள்ளிய பிறகு புல்மேடு, எரிமேலி வழியாக பெருவழி எனப்படும் வனப்பாதையில் பக்தர்கள் அதிகளவு ஐயப்பனை தரிசிக்க வருகின்றனர். மற்றொருபுறம் பம்பையில் இருந்து நேரடியாக சபரிமலை சன்னிதானத்திற்கு செல்லலாம். ஆனால் பெருவழிப் பாதையில் வரும் பக்தர்களும் சிறுவழிப்பாதையில் வரும் பக்தர்களும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்கிறார்கள். இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

பெருவழிப் பாதை:

இந்த நிலையில் பெருவழிப்பாதை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு வரிசை அமைக்க சபரிமலை தேவசம் போர்டு முடிவு செய்தது. இதற்காக அவர்கள் பாதயாத்திரை தொடங்கும் பகுதியிலேயே வனத்துறை சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் மண்டல பூஜை நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் மகர விளக்கு பூஜை தொடங்கியது.

மகர விளக்கு பூஜை தொடக்கம்:

இதற்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தார். இதை அடுத்து முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில் நேற்று 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

புக்கிங் நிறுத்தம்:

சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதற்காக ஜனவரி 15ஆம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. மேலும் ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் வசதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பெருவழிப்பாதை வரும் பக்தர்களுக்கான சிறப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு பாஸ்கள் ரத்து:

எரிமேலி மற்றும் புல்மேடு வழியாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்கத்தைவிட ஐந்து மடங்கு பக்தர்கள் அந்த பாதையில் பயணம் செய்கின்றனர். இதனால் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக எரிமேலி, புல்மேடு பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+